டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டமானது 2023.06.06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில் தற்போதைய காலநிலை மாற்றத்தினால் டெங்கு நோயின் தீவிரத்தன்மை குறைவடைந்த போதிலும் முற்றாக டெங்கு நுளம்பின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை. காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை என்ற நிலை வரும் வரை MOH,UC, பொலிஸ், பிரதேச செயலகம், இணைந்து அதனை கட்டுப்படுத்த வேண்டுமெனவும் அத்துடன் டெங்கு பரவும் ஆபத்தான இடங்கள், வீடுகள், நீர் தேங்கி நிற்கும் இடங்கள், என்பவற்றை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
மேலும் மிக முக்கியமாக பாடசாலைகளில் டெங்கு சிரமதானம் செய்தல், மாணவர்களுக்கு டெங்கு தொடர்பான விழிப்புணர்வுகளை நடாத்துதல், பாடசாலைகளில் டெங்கிற்கு பொறுப்பான ஆசிரியர் ஒருவரை நியமித்தல், அத்துடன் விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து டெங்கினை கட்டுப்படுத்த வேண்டுமெனவும் திண்மக் கழிவு முகாமைத்துவத்தினை திறம்பட செய்ய பாடசாலை மாணவர்கள் மத்தியில் பல விரிவுரைகள் செய்ய வேண்டிய தேவை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதற்கு பிரதேச செயலகம், நகரசபை, பொலிஸ் முழு ஒத்துழைப்பையும் தருவதாகவும் திட்டங்களை பாடசாலை ஆரம்பமான பின்னர் நடைமுறைப் படுத்தபடவுள்ளதாகவும் திட்டமிடப்பட்டது.
அத்துடன் 2023.06.06 ஆந் திகதியிலிருந்து (Home & Home visit) வீடுகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு கள நடவடிக்கைகளை மேற்கொள்வது என திட்டமிடப்பட்டு Action plan செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, காத்தான்குடி நகரசபை செயலாளர், AMO, மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நிருவாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர்,DEO, பொது சுகாதார பரிசோதனைகள், பள்ளி வாயலில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் செயலாளர், வெளிக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




காத்தான்குடி பிரதேசத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைக்கும் செயலணியினருக்கான கலந்துரையாடலானது 2023.06.02 ஆந் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.த.நிர்மலராஜ், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், காதி நீதிபதி Ms.ரூபி, சட்டத்தரணி உவைஸ், மற்றும் DEO திரு.கலாவுதீன், சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்கள பொறுப்பதிகாரி திரு.சந்திரகாந்தன், IWARE நிறுவனத்தின் பணிப்பாளர் அனிஸா பிர்தௌஸ், WIN நிறுவனத்தின் பணிப்பாளர் Ms.சங்கீதா , கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அதற்கான தீர்வினை பெற்றுக் கொள்வதற்கான வழிப்படுத்தல் தொடர்பாக ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம் பெற்றது. அதன் போது நீதிமன்றில் முன்னைய காதியின் தீர்ப்பில் திருப்தியின்மை, பாரபட்சமுள்ள பெண்கள் மீளவும் வழக்கினை பதிவு செய்யுமாறு ஆலோசிக்கப்பட்டு அனைத்து பெண்களுக்கும் இத்தகவலை அடையச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வானது மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.R.B.றஸ்மின் அவர்களது இணைப்பாக்கத்தில் IWARE பெண்கள் அமைப்பின் முழுப் பங்களிப்புடனும் நடைபெற்றது.



|
ReplyForward
|
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டமானது 2023.05.30 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி.ஆர்.காயத்ரி ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளரால் கணக்கறிக்கைகள், உள்ளக கணக்காய்வு பிரிவு அறிக்கை என்பன விளக்க காட்சிகள் (Presentation) மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் ஆலோசனைகளும், கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்விற்கு பிரதேச செயலகத்தின் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள்,
பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள்,பதவி நிலை உதவியாளர்கள், மற்றும் விடய உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இறுதியாக கணக்காளர் செல்வி.கே.சித்ரா அவர்களது நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.



கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அணுசரணையில் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பிரிவு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் "கவிதை இரசனை"வேலைத் திட்டத்தின் கீழ் கவிதை பயிற்சிப்பட்டறை யானது 2023.05.30 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சிப்பட்டறையில் 60மாணவர்கள் கலந்து கொண்டதுடன் வளவாளர்களாக வித்தியாகீர்த்தி இளங்கோ அமிர் அலி (BA), மற்றும் கவிதாயினி Ms.ஜுஸ்லா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கியிருந்தனர்.
இப்பயிற்சிப்பட்டறையானது கவிதைத்துறையில் மிளிரத்தக்க வகையில் மரபுக் கவிதை, நவீன கவிதை, பற்றிய தெளிவான விளக்கங்களும் , பயிற்சிகளும் அத்துடன் கவிதைகள் வாசிக்கும் முறைமைகள் போன்றவற்றுக்கான பயிற்சியினை வளவாளர்கள் சிறப்பான முறையில் மாணவர்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு 2023.05.30- 2023.06.05 ஆந் திகதி வரையிலான முழு வாரமும் சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அந் தவகையில் இன்று 2023.05.30 செவ்வாய்க்கிழமை மரநடுகை தினமாகும்.அதனை முன்னிட்டு 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் மரநடுகை நிகழ்வு நடைபெற்றது.
அதன் ஆரம்ப நிகழ்வு 166A,164,167C,167A ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா ஆகியோர் கலந்து கொண்டு மரநடுகையினை ஆரம்பித்து வைத்தனர்.
மா, கொய்யா, அம்பெர்லா, மற்றும் தேசி,தோடை, ஆகிய மரக்கன்றுகள் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நடப்பட்டுள்ளது.
இவ் நிகழ்விற்கு GSO,EDO,SDO,DCO,DO( Environment) , மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள், பள்ளிவாயல் இமாம் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
























