காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையானது பிரதேச செயலாளர் உ.உதயசறிதர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் தொடர்ந்து வீடு வீடான டெங்கு களவிஜயம் உத்தியோகத்தர்களால் நடைபெற்று வருகின்றது.
 
அந்தவகையில் இன்று (15) ஆந் திகதி 167,167E ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 225 வீடுகளுக்கு களவிஜயம் மேற்கொண்ட போது 06 வீடுகள் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 11 வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
 
டெங்கு களவிஜயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சமுதாய அடிப்படை அமைப்புக்கள், களப்பணியில் ஈடுபட்டனர்.
 
வீடு வீடான டெங்கு களவிஜயத்தினை தொடர்ந்து மீளாய்வு கூட்டமானது காத்தான்குடி- 01, மீராஜும்ஆ பள்ளிவாயலில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
 
மேலும் கடந்த 07 நாட்களிலும் நகரசபையினால் எதுவிதமான ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேச செயலாளர் உ.
உதயசிறிதரின் வழிகாட்டலின் கீழ் பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இணைந்து டெங்கு ஒழிப்பு கள விஜயம் கடந்த 07 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
 
13 மற்றும் 14 ஆந் திகதிகளில்  165ஏ,166 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் டெங்கு கள விஜயம் நடைபெற்றது.இதில் நூற்றுக்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் டெங்கு பரவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட 03 வீட்டு உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் 30 வீடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
டெங்கு கள விஜயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி,பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள், ஆகியோர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
 
வீடுகளுக்கான கள விஜயத்தினை தொடர்ந்து டெங்கு தொடர்பான மீளாய்வுக் கூட்டம் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 
காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பிரிவின் ஒழுங்குபடுத்தலில் பாரம்பரிய விளையாட்டு விழாவானது  2023.06.08 ஆந் திகதி வியாழக்கிழமை முற்பகல் 8.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் காத்தான்குடி சிறுவர் இல்லத்தில் இடம் பெற்றது.
 
இவ்விளையாட்டு விழாவில், 68 சிறுவர் இல்ல சிறார்கள் பங்குபற்றியதுடன் மாணவர்களின் கலை ஆர்வம் மற்றும் மனரீதியான ஆற்றுப் படுத்தல் செயற்பாட்டினையும் மையப்படுத்தியதாக முட்டி உடைத்தல், தேசிக்காய் ஓட்டம், யானைக்கு கண் வைத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், பணிஸ் சாப்பிடுதல், குளம் கரை, சுரைக்காய் இழுத்தல், போன்ற விளையாட்டுகள் இடம் பெற்றது.
 
இவ்விளையாட்டு நிகழ்விற்கு  சிறுவர் இல்ல பொறுப்பாளர் திரு.எவ்.எம்.மஜித், கிராம உத்தியோகத்தர் திருமதி.மபாஸா சுல்பிகார், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.எம்.நிஸ்றின், NDDCB உத்தியோகத்தர்களான  திரு.எஸ்.சந்திரகாந்தன், திரு.பீ.கோவிந்தராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
கலை இரசனை வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பிரிவு உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் நாடகப் பயிற்சிப் பட்டறையானது 2023.06.06 மற்றும் 07 ஆகிய திகதிகளில் மெத்தைப்ள்ளி வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இப் பயிற்சிப் பட்டறையில் மட்/மம/ மெத்தைப்ள்ளி வித்தியாலயம், மட்/மம/அல்ஹீரா வித்தியாலயம், மட்/ மம /மத்திய கல்லூரி ( தேசிய பாடசாலை) ஆகிய பாடசாலைகளில் இருந்து 35 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 
இதன் வளவாளராக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், களுவாஞ்சிக்குடி, ப.ராஜதிலகன் கலந்து கொண்டு மாணவர்களின் கலை ஈடுபாடுகளை விருத்தி செய்தல், மாணவர்களுக்கு அரங்க விளையாட்டு மற்றும் நாடகம் சார் பயிற்சிகளையும் மிகவும் சிறந்த முறையில் தெளிவுபடுத்தியிருந்தனர்.
 
காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் வகையில் பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் பிரதேச செயலகம், நகரசபை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், இணைந்து 2023.06.06 ஆந் திகதி தொடக்கம் வீடு வீடாகச் சென்று டெங்கு களப்பரிசோதனைகள் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
டெங்கு கள விஜயத்தினை தொடர்ந்து அது தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதேச செயலாளர் அவர்களது தலைமையில் நடைபெற்று வருகின்றது.
 
இக்கூட்டத்தில் உத்தியோகத்தர்கள் கள விஜயத்தினை மேற்கொள்ளும் போது எதிர்நோக்கும் பிரச்சனைகள், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை, டெங்கு சோதனையில் எவ்வாறான இடங்களை பார்வையிட வேண்டும் என்பது  தொடர்பாக பிரதேச செயலாளரினால் கலந்துரையாடப்பட்டது.
 
இக்கூட்டத்தில்  பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 

News & Events

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

News & Events

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
Aug2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
Jul2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top