Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka

dskky

எமது நிகழ்வுகள்

பிரதேச செயலகத்திற்கான Mobile Application வெளியீடு

காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கைத்தொலைபேசி மென்பொருளொன்றினை வெளியிட்டுள்ளது.

இந்த கைத்தொலைபேசி  மென்பொருளானது பொதுவாக காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பொதுமக்கள் இலகுவில் பிரதேச செயலகம் சார்ந்த தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் பிரதேச செயலக நிழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காகவும் பிரதேச செயலக  சேவைபெறுநர் விபரக் கொத்துக்கைளை பெற்றுக் கொள்வதற்கும் அத்துடன் குறித்த சேவை தொடர்பான உத்தியோகத்தர்கள் விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் மற்றும் அவர்களுடன் இலகுவில் சமூக வலைத்தலங்ளினூடாக தொடர்பு கொள்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அரச உத்தியோகத்தர்கள் தங்களுக்குத் தேவையான தாபன விதிமுறை மின் புத்தகம் , வர்த்தமானி அறிவித்தல் மற்றும் சுற்றறிக்கைகளையும் ஒரே இடத்தில் இம் மென்பொருளினை பயன்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.

மற்றும் வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருப்போருக்கான மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் வேலைவாய்ப்பை பதிவு செய்யும் சேவையும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இம்மென்பொருளானது காத்தான்குடி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரான திரு. AGM. பஹ்மி அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மென்பொருள் வடிவமைப்பில் நெனசல செயற்திட்டத்தின் கீழ் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தினால் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Antroid கையடக்க தொலைபேசி பாவனையாளர்கள் இம் மென்பொருளைப் பின்வரும் இணைப்புகளில் பெற்றுக் கொள்ளலாம்.

இணைப்பு -01 Mirror

 

iPhone பாவனையாளர்கள் இம் மென்பொருளிளை இந்த இணைப்பின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்

 

Read more...

 

MSAPN - 2017 கிராம மட்ட விழிப்பூட்டல் கருத்தரங்கு

    21.02.2017 ம் திகதி 166,165,165A ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில்  இடம் பெற்ற விழிப்பூட்டல் கருத்தரங்கில் உரிய பிரிவுக்குரிய கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திவிநெகும உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் போசாக்கு அபாயத்திற்குட்பட்ட 42 குடும்ப அலகுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 42 தாய்மார்கள் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.

இந் நிகழ்வில், காத்தான்குடி விவசாய விரிவாக்கல் நிலையத்தின் விவசாய போதனாசிரியர் விசேட அறிவூட்டல் நிகழ்வினை நடாத்தியதுடன் , ஆரோக்கியமான உணவு தயாரித்தல் செயன் முறை, வீட்டுத் தோட்டத்தின் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், குறுகியகால வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை முறைகள் மற்றும் வீட்டுத் தோட்டத்தைத் தாக்கும் பீடைகளை எவ்வாறு எதிர்கொள்ளலாம் போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கத்தினையும் வழங்கினார்.



Read more...

 

காத்தான்குடி அபிவிருத்திக் குழுக் கூட்டம்

dskkyகாத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்கான பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (03.03.2017) )காலை 9.30 மணிக்கு மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

Read more...

 
DSKApps e-Gov.Initiative

Dskapps

Dskapps

News and Events
Who is Online
We have 54 guests online
ஸம் ஸம் சிறப்பு மலர்

Event
August 2017
S M T W T F S
30 31 1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31 1 2
Annual Report 2015

anual

Content View Hits : 90411