Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka

dskky

எமது நிகழ்வுகள்

MSAPN - 2017 கிராம மட்ட விழிப்பூட்டல் கருத்தரங்கு

    21.02.2017 ம் திகதி 166,165,165A ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில்  இடம் பெற்ற விழிப்பூட்டல் கருத்தரங்கில் உரிய பிரிவுக்குரிய கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திவிநெகும உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் போசாக்கு அபாயத்திற்குட்பட்ட 42 குடும்ப அலகுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 42 தாய்மார்கள் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.

இந் நிகழ்வில், காத்தான்குடி விவசாய விரிவாக்கல் நிலையத்தின் விவசாய போதனாசிரியர் விசேட அறிவூட்டல் நிகழ்வினை நடாத்தியதுடன் , ஆரோக்கியமான உணவு தயாரித்தல் செயன் முறை, வீட்டுத் தோட்டத்தின் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், குறுகியகால வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை முறைகள் மற்றும் வீட்டுத் தோட்டத்தைத் தாக்கும் பீடைகளை எவ்வாறு எதிர்கொள்ளலாம் போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கத்தினையும் வழங்கினார்.





    28.02.2017 ம் திகதி 167,167E ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில்  இடம் பெற்ற விழிப்பூட்டல் கருத்தரங்கில் உரிய பிரிவுக்குரிய கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திவிநெகும உத்தியோகத்தர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் இந்நிகழ்வில் போசாக்கு அபாயத்திற்குட்பட்ட 36 குடும்ப அலகுகளிலிருந்து குடும்பத் தலைவிகள் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். கொண்டனர்.

இந் நிகழ்வில் காத்தான்குடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அவர்களினால் ஆரோக்கியமான உணவுகளைக் கையாளும் ஆக்கபூர்வமான முறைகள் பற்றியும் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் பற்றியும் தெளிவான விளக்கம் வழங்கப்பட்டதுடன், Fast Food யினால் ஏற்படக் கூடிய பாதக விளைவுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. கலந்துகொண்டோர் திருப்திப்படும் வகையில் ஆரோக்கிய வாழ்வு தொடர்பிலும் - பல்வேறு நோய்கள் மற்றும் சுகாதார ரீதியான நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பிலும் மிகவும் விரிவான – தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி செயலகத்தின் கீழ் வருகின்ற தேசிய போசாக்கு செயலகத்தின் வழிகாட்டலுக்கமைய இவ்வாறான போசாக்கு தொடர்பானதும் - மந்தபோசாக்கு தொடர்பானதுமான விழிப்பூட்டல் நிகழ்வுகள் 18 கிராமசேவகர் பிரிவுகளிலும் தொடராக நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிட்டுக் கூறத்தக்கதாகும்.
dskky

dskkydskkydskkydskkydskkydskky

 

காத்தான்குடி அபிவிருத்திக் குழுக் கூட்டம்

dskkyகாத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்கான பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (03.03.2017) )காலை 9.30 மணிக்கு மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

Read more...

 

காத்தான்குடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த உடல் பயிற்சி வாரம்

விளையாட்டுத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தியுள்ள தேசிய விளையாட்டு மற்றும் உடல் நல மேம்பாட்டு வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த உடல் பயிற்சிவாரம் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராசா தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை. ஆதம்லெப்பை ஆண் உத்தியோகத்தர்களுக்கும் மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் செல்வி கிறிஷானி பெண் உத்தியோகத்தர்களுக்கு உடற்பயிற்சிகளை வழங்கினர்.

இதன்போது பிரதேச செயலக கணக்காளர் கே.சித்திரா நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஐ.எம் பாயிஸ் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதேவேளை, காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான இல்ல விளையாட்டுப்போட்டி  12ஆம் திகதி காத்தான்குடி கடற்கரையில் பிரதேச செயலாளர் எஸ்.எச் முஸம்மில் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 
100 Days Programme

News and Events
Who is Online
We have 44 guests online
ஸம் ஸம் சிறப்பு மலர்

Event
March 2017
S M T W T F S
26 27 28 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1
Annual Report 2015

anual

Content View Hits : 76893