காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இப்தார் ஒன்று கூடல் நிகழ்வானது 2025.03.19 ஆந் திகதி புதன்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜுத் அவர்களது தலைமையில் Rayyan beach place, Kattankudy இல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டீனா முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து இப்தார் நோன்பு நோற்றலின் நோக்கம், அதன் கடமைகள், மனிதநேய பண்புகள் தொடர்பான கருத்துக்களை அல் அக்ஸா கல்லூரியின் பிரதி அதிபர் எம்.சீ.எம்.நுஸ்ரி நலீமி, மற்றும் காத்தான்குடி கிளையின் ஜம்மியத்துலமா தலைவர் அப்துல் கபூர் மதனி ஆகியோர் சிறந்த கருத்துக்களை வழங்கியிருந்தமை சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி .எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் கே.சித்ரா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி .எஸ்.தனுஜா,நிருவாக உத்தியோத்தர் எம்.எஸ்.றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி வாங்கி முகாமையாளர்கள், மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
.




























