இலங்கை தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற உற்பத்தித்திறன் போட்டியில் காத்தான்குடி பிரசே செயலகம் அகில இலங்கை ரீதியில் இரண்டாமிடத்தினை பெற்று எமதூருக்கும் மாவட்டத்திற்கும் பெறுமை சேர்த்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொள்வது இதுவே முதல் தடவையாகும்.

இவ்வெற்றியினை கொண்டாடும் நிகழ்வு கடந்த 02.01.2019ம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் இவ்வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டது.  மேலும் எமது அடுத்த இலக்கான முதலாமிடத்தினை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து உத்தியோகத்தர்களும் முழு மூச்சுடன் செயற்பட வேண்டுமென பிரதேச செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.

தகவல் தொழிநுட்பத்தினை அமுல்படுத்தும் ஆண்டாக 2018ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ... நிறுவனத்தின் அனுசரனையுடன் நவீனமயப்படுத்தப்பட்ட வரவேற்பு கருமபீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரசே செயலகத்திற்கு சேவை பெறவரும் ஒவ்வொரு சேவைபெறுவனரும் இதில் பதிவு செய்யப்படுவதுடன் அவர்களுக்கு சேவை தொடர்பான சிட்டையும் வழங்கி வைக்கப்படும். அதனை உரிய அதிகாரியிடம் காட்டிய பின்னர் தமது சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும். 

சேவைபெறுனர் முதல்தடவை மாத்திரமே தங்களது பெயர் விபரங்களைக் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். மீண்டும் வருகைதரும்போது தங்களது அடையாள அட்டை இலக்கம் அல்லது தொலைபேசி இலக்கத்தனை வழங்கி சிட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் குறித்த சேவைக்கு விண்ணப்பித்த பின்னர் தாங்கள் விண்ணப்பித்த சேவை முடிவடைந்து விட்டதா என்பதை அறிந்து கொள்ள இதற்கொன பிரத்தியோகமாக அமைப்பட்டுள்ள தொடுதிரையின் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட சிட்டையில் உள்ள விண்ணப்ப இலக்கத்தினை வழங்கி பெற்றுக் கொள்ளலாம்.

பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைய  2019ம் ஆண்டிற்கான முதலாம் திகதி அரச கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கடந்த 02-01-2019ம் திகதி பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அரச உறுதி மொழி பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தரினாலும் ஏற்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொது மக்கள் பணத்தில் சம்பளம் பெறும் அரச உத்தியோத்தர்களாகிய நாம் அரச கடமைகளை வினைத்திறனாகவும் பயனுறுதிமிக்கதாகவும் பொதுமக்களுக்கு மேற்கொள்ள வேண்டும் என பிரதேச செயலாளரினால் அறிவுருத்தப்பட்டது. மேலும் ஏனைய பதவிநிலை உத்தியோகத்தினராலும் அறிவுரைகள் வழங்கப்பட்டு அந்நிகழ்வு இனிதே முடிவுற்றது.

News & Events

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
Aug2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
Jul2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top