ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නරාජ්ය සේවා ස්ථාන
මුල් පිටුව
சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு க்கான அடிக்கல் நடும் நிகழ்வு
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு வேலைத் திட்டம் -2023 வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 164 C கிராம உத்தியோகத்தர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட மூன்று வீடுகளில் முதலாவது வீடான எஸ்.எம்.மாஜிதா என்பவரது வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2023.07.26 ஆந் திகதி புதன்கிழமை சமூக அபிவிருத்தி உதவியாளர் எம்.எஸ்.அன்சார் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், முகாமைத்துவப் பணிப்பாளர் ஆர்.வாமதேவன், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.எஸ்.கண்ணன், வலய முகாமையாளர் எம்.ஏ.எம்.சுல்பி, மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான வீ.விஜயலக்ஸ்மன்
(சந்தைப்படுத்தல்) திருமதி.பு.ரதீஸ்காந்தி (CBO) , கருத்திட்ட உதவியாளர் ஏ.எல்.எச்.எம்.இப்றாஹிம், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் முகைதீன், தைக்கா பள்ளி வாயல் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் வீட்டிற்காக அரசாங்கத்தினால் ரூ.750,000/= நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







கிராமிய ஆடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் ஆடுகள் வழங்கி வைத்தல்.
ஆடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 167A மற்றும் 167B ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த இரண்டு பயனாளிகளுக்கு 2023.07.25 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களால் தலா மூன்று ஆடுகள் வீதம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு கால்நடை வைத்திய அதிகாரி SDM.மாஹிர், பிரிவிற்கு பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான MMM.இர்ஷாத், மற்றும் கலீல்தீன், திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களான எம்.ஏ.எம்.நலீம், திருமதி.ராதிகா கோமதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்டத்திலான சிறு விற்பனைக் கண்காட்சி -2023
காத்தான்குடி பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்டத்திலான சிறு விற்பனைக் கண்காட்சி (25) செவ்வாய்க்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.
இவ்விற்பனை கண்காட்சியில் உற்பத்தியாளர்களினால் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், பாதணிகள், இனிப்புப் பண்டங்கள், ஆடைகள், போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கொள்வனவில் ஈடுபட்டனர்.
இந் நிகழ்விற்கு மாவட்ட சிறு தொழில் அபிவிருத்தி சந்தைப்படுத்தல் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் SR.ராஜரெட்ணம், காத்தான்குடி பிரதேச செயலக சிறு தொழில் முயற்சிப்பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான S.சனோகாந், திருமதி.பி.சிந்துஜா, மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.எம்.சந்திய குமாரி, திருமதி.MRF.பர்வின், திருமதி.S.பிலமேந்திரன் (NADA) ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







43 ஆவது தேசிய இளைஞர் விருது போட்டி - 2023
இளைஞர், யுவதிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருமுகமாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 43வது தடவையாக நடாத்தப்படுகின்ற தேசிய இளைஞர் விருதுப் போட்டிகள் மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ளன.
*தமிழ் மொழிப் போட்டிகள்*
1.அறிவிப்பாளர்
2.பேச்சு
3 இளம் பாடகர்
*வயதெல்லை: 15 - 29* (1994.03.24ம் திகதிக்கு பின்னரும் 2008.03.24ம் திகதிக்கு முன்னரும் பிறந்தவர்கள்).
*காலம்: 2023.07.29 (சனிக்கிழமை).*
*நேரம்: காலை 9.30 மணி.*
*இடம்: மட்/ மஹஜன கல்லூரி மண்டபம்.*
மேலதிக தகவல்களுக்கு:
AW. இர்சாத் அலி,
இளைஞர் சேவை உத்தியோகத்தர்,
பிரதேச செயலகம்,
காத்தான்குடி.
0771149822/ 0757551982.
|
ReplyForward
|





















