ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නරාජ්ය සේවා ස්ථාන
මුල් පිටුව
பிரதேச மட்ட இலக்கிய போட்டித் தொடர் - 2023
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக வாய்மொழி, கையெழுத்து மூலமான போட்டிகளை மாணவர்களின் இலக்கிய ஆற்றுகை, மற்றும் கலை ஆகியவற்றின் வெளிப்பாடுகளை ஊக்கப்படுத்துவதற்காக வருடாவருடம் பிரதேச மட்ட இலக்கிய போட்டித் தொடர் இடம் பெற்று வருகின்றது.
அந்தவகையில் 2023 ஆம் ஆண்டிற்கான பிரதேச மட்ட இலக்கிய போட்டித் தொடரானது 02, 08.08.2023 ஆகிய இரு தினங்களில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இப் போட்டித் தொடரில் 180 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் நடுவர்களாக இசைத்துறை விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம்,கல்லடி பிரிசில்லா ஜோர்ஜ், காத்தான்குடி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.யுவசாந்தி சிறிஸ்காந்த ரூபன், திருமதி.ரேணுகா அர்ச்சுனன், திருமதி.டிஜிசார்தினி தேவரூபன், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், மண்முனை வடக்கு திருமதி.தானியா தனுசாந், அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட செயலகம், மட்டக்களப்பு யோகேந்திரன் தனுஷியா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டித் தொடரானது கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்து உஷா, WDO யூ.ஆர்.எஸ்.றஸ்மின், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி.எச்.பீ.எம்.சில்மி தாஜுதீன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.எவ்.நுஹா ஆகியோரின் ஒழுங்கு படுத்தலில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.





பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம் -2023
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டமானது 2023.08.08 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களின் தலைமையில் பிரதேச செயலக விதாதா வள நிலையத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் 167A,167B,167C , ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வாடி அமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்விற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை உதவிப் பணிப்பாளர், E-Planer, நில அளவையாளர், மற்றும் மாவட்ட மீன்பிடி உத்தியோகத்தர், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்,கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள் (167A,167B,167C) , காணிப்பயன்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர், காணிக்கிளை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலைஞர்களுக்கான உதவிக் கொடுப்பனவு வழங்குதல் -2023
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் கலைஞர்களுக்கு உதவிக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இவ்வருடமும் கலைஞர்களுக்கு (ரூ.10000) உதவிக் கொடுப்பனவு வழங்குதல் நிகழ்வானது 2023.08.07 ஆந் திகதி திங்கட்கிழமை செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக் கொடுப்பனவுகள் எஸ்.எல்.நஜிமுதீன், எம்.ஐ.எம்.முஸ்தபா, ஏ.எம்.அப்துல் அஸீஸ், ஆகிய ய மூன்று கலைஞர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான எம்.ஏ.சி.ஜெய்னுலாப்தீன், யோ.தனுசியா, காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்து உஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.



மூன்றாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ க்குக் கூட்டம் -2023
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டமானது இன்று (04) வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக விதாதா வள நிலையத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்திற்கு பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி.ஆர்.காயத்ரி அவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளரால் கணக்கறிக்கைகள், உள்ளக கணக்காய்வு பிரிவு அறிக்கைகள், சமுர்த்தி விசேட கொடுப்பனவுகள், மற்றும் காணி என்பன விளக்க காட்சிகள்(Presentation) மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் ஆலோசனைகளும் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
பிரதம உள்ளக கணக்காய்வாளர் கருத்து தெரிவிக்கையில் காத்தான்குடி பிரதேச செயலகமானது நிதி, நிருவாகம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் மிகவும் சிறந்த முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இதற்காக பிரதேச செயலாளர் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இக் கூட்டத்திற்கு பிரதேச செயலகத்தின் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள், பதவி நிலை உதவியாளர்கள், மற்றும் விடய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக கணக்காளர் செல்வி.கே.சித்ரா அவர்களின் நன்றியுடன் கூட்டம் நிறைவு பெற்றது.


























