ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නරාජ්ය සේවා ස්ථාන
මුල් පිටුව
கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் -2023
கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது 2023.09.04. ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரி அவர்கள் கலந்து கொண்டதுடன் மக்களை சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து அவர்களை ஓய்வூதியக்காரர்களாக மாற்றி நன்மையடையச் செய்து 2023 ம் ஆண்டிலும் தேசிய அடைவு மட்டத்தை அடையவேண்டும் எனவும் அதற்காக அனைத்து உத்தியோகத்தர்களும் செயற்படவேண்டும் எனவும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
அடுத்து சமூக நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்காக தெரிவு செய்யப்பட்ட 3354 பேரில் ஜூலை 31 ஆந் திகதிக்கு முன்னர் வங்கிக் கணக்குகளை திறந்த 2041 பேரில் 1354 பேருக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட போதிலும் 684 நபர்களின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஏனைய காரணங்களால் அவர்களது கொடுப்பனவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஜூலை 31 க்கு பின்னர் வங்கிக் கணக்குகளை திறந்த கொடுப்பனவை பெற்றுக் கொள்ளாத ஏனையவர்களுக்கு எதிர்வரும் வாரங்களில் வழங்கப் படும்.அத்துடன் 5345 மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதற்கான மேன்முறையீடுகள் இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் அனைத்து உத்தியோகத்தர்களும் வழங்குவதன் மூலம் இலகுவாக தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியுமென பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சௌபாக்கியா, கிராம சக்தி வேலைத்திட்டம், சமுர்த்தி, விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர், காணி, சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் பிரதேச தொகை மதிப்பு உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் (Environment), சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிய உத்தியோகத்தர்களிடம் தங்களது வேலை முன்னேற்றங்கள் தொடர்பாக பிரதேச செயலாளரினால் மீளாய்வு செய்யப்பட்டது.





சமுர்த்தி சௌபாக்கியா ரன்விமன 3வது வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு-2023
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மூன்று வீடுகளில் மூன்றாவது வீடான 167B புதிய காத்தான்குடி கிழக்கு பிரிவில் வசிக்கும் எவ்.சபானா என்பவரது சௌபாக்கியா ரன்விமன 3வது வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 30.08.2023 ஆந் திகதி புதன்கிழமை உதவி பிரதேச செயலாளார் திருமதி .எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை முகாமையாளர், வலய முகாமையாளர், சமூக அபிவிருத்தி உதவியாளர், காத்தான்குடி பள்ளி வாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பைத்துல் சக்காத் நிதிய தலைவர் T.M அன்சார் , மற்றும் உறுப்பினர்களும் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசாங்கத்தினால் இவ் வீட்டிற்காக ரூ.750,000/= நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







காத்தான்குடியில் பிரதேச மட்ட சுற்றுலா குழு அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல்
காத்தான்குடியில் பிரதேச மட்ட சுற்றலா குழு அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் 2023.08.29 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் வளவாளர்களாக பேராசிரியர் Dr.A.M.முஸ்தபா PHD (SEUSL) , பேராசிரியர் Dr.KM.முபாறக் PHD (SEUSL) மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளர் (SEUSL) M.முகம்மது சிராஜ், ஆகியோர் கலந்து கொண்டு புதிய சுற்றுலா தலங்கள் மற்றும் அடையாளங்களை இனங்கண்டு அவை தொடர்பான விடயங்களை சேகரித்தல் , மற்றும்
சுற்றுலா சார்ந்த அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு பிரதேச மட்டத்தில் காணப்படும் வளங்களை அபிவிருத்தி செய்யக் கூடிய இடங்கள் மற்றும் சமூக கலை கலாசார மத ரீதியான விழுமியங்களுக்கு உட்பட்ட வகையில் எவ்வாறு சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்தல், அதற்காக பிரதேச மட்ட சுற்றலா குழுவொன்றை நிறுவுதல் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்விற்கு உதவி திட்டமிடல் பணிப்பாளர், நகரசபை நிருவாக உத்தியோகத்தர், IWARE நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர், EDO,SDO, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





பிரதேச தினக் கூட்டம் -2023
காத்தான்குடி பிரதேச செயலக 2023 ஆம் ஆண்டிற்கான 5வது பிரதேச தினக் கூட்டமானது (28) திங்கட்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச தினக் கூட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் மாத்திரம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்க்கப்படுமென பிரதேச செயலாளரால் வலியுறுத்தப்பட்டது.
மேலும் இக் கூட்டத்தில் விவசாய போதனாசிரியை அவர்களால் சமுர்த்தியினால் வழங்கப்பட்ட விதைகளை அதிகமான பயனாளிகளினால் சரியான முறையில் நடப்பட்டு பாதுகாக்கப்படவில்லை.அதனால் பயனாளிகள் முழுப் பயனையும் பெறவில்லை எனவும் தெரிவித்தார்.
கருத்திட்ட முகாமையாளரினால் அவர்களுக்குரிய பயிற்சிகள் வழங்கப்பட்ட பின் விதைப்பைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வீடுகளிலும் சாப்பாட்டு கடைகளிலும் இருந்து வருகின்ற கழிவுகள் கான்களில் விடப்படுவதாகவும் இதனால் மக்களுக்கு சுகாதாரம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் எமது பிரதேசத்தை பாதுகாப்பது நாம் எல்லோருடைய பொறுப்பு எனவும் நகரசபை அதனை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் நகரசபையினால் வியாபாரப்பதிவுகளை மேற்கொள்ளும் போது மிக முக்கியமாக தேசிய அடையாள அட்டை இலக்கம், தேசிய அடையாள அட்டையில் உள்ள விலாசம், பெயர் என்பவற்றை பரிசீலித்த பின் வியாபாரப் பதிவுகளை வழங்குமாறும், பிரத்தியேக வகுப்புகள் நடைபெறும் இடங்களுக்கான உரிமையாளர்கள் MOH, CRPO ஆகியோரிடமிருந்து அனுமதியினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் தொடர்ந்து SPHI மலசலகூடம், நீர் வசதி, டெங்கு அபாயம், போன்றவைகளை மேற்பார்வையினை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுகளில் பெற்றோர்கள் அதிர்ப்தியடைவதாகவும் வழங்கப்படும் உணவுகள் போசாக்கு நிறைந்ததாகவும் ஆரோக்கியமானதாகவும் அமைவதற்கு பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோர்களிடம் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் DEO விடம் பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
SPHI அவர்களால் டெங்கின் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், EDO,SDO, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர், செயலாளர்கள், மற்றும் அவற்றின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலாளர் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக உதவிப் பிரதேச செயலாளரின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.


























