காத்தான்குடியில் பிரதேச மட்ட சுற்றலா குழு அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் 2023.08.29 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் வளவாளர்களாக பேராசிரியர் Dr.A.M.முஸ்தபா PHD (SEUSL) , பேராசிரியர் Dr.KM.முபாறக் PHD (SEUSL) மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளர் (SEUSL) M.முகம்மது சிராஜ், ஆகியோர் கலந்து கொண்டு புதிய சுற்றுலா தலங்கள் மற்றும் அடையாளங்களை இனங்கண்டு அவை தொடர்பான விடயங்களை சேகரித்தல் , மற்றும்
சுற்றுலா சார்ந்த அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு பிரதேச மட்டத்தில் காணப்படும் வளங்களை அபிவிருத்தி செய்யக் கூடிய இடங்கள் மற்றும் சமூக கலை கலாசார மத ரீதியான விழுமியங்களுக்கு உட்பட்ட வகையில் எவ்வாறு சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்தல், அதற்காக பிரதேச மட்ட சுற்றலா குழுவொன்றை நிறுவுதல் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்விற்கு உதவி திட்டமிடல் பணிப்பாளர், நகரசபை நிருவாக உத்தியோகத்தர், IWARE நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர், EDO,SDO, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




















