சர்வதேச மகளிர் தின தேசிய நிகழ்ச்சி அனுஷ்டித்தல் 

தேசிய வாரத்தினை முன்னிட்டு ஆரோக்கியமான பெண்கள் தேசத்திற்கு பலம் எனும் தொனிப்பொருளில் உடல் உள ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு  06.03.2025 வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் அவர்களது தலைமையில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களது ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இந் நிகழ்வின் வளவாளர்களாக Dr.டயான் மற்றும் Dr.லுபோஜிதா கமல்ராஜ்  ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா , பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா , பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி Dr.நஸீர்தீன், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எம்.றஊப் , சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், மற்றும் பொது சுகாதார பரிசோதகர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இச்செயலமர்வில் தொழுநோய் தொடர்பாக தொழு நோய் எவ்வாறு ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள், அதனை  இலகுவில்  கண்டறிந்து குணமடைவதற்கான வழிகள், தொழுநோய் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை பெறும்  இடங்கள் , தொழுநோய் தொடர்பான தெளிவூட்டல்கள் , ஆலோசனைகள் பெறுவதற்கான தொலைபேசி இலக்கங்களும் 0774704286, வழங்கப்பட்டது.
 
உத்தியோகத்தர்களாகிய நாங்கள் அனைவரும் நாமும் நாம் குடும்பங்களையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும்.களவிஜயங்களை மேற்கொள்ளும் போதும் நிகழ்வுகளை நடாத்தும் போதும் தொழுநோய் சம்பந்தமான விழிப்புணர்வுகளை மேற்கொள்ளுமாறும்பிரதேச செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.
 
 
 
BBBBCCCEEEEEAAAA
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2025ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம் இன்று (25) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜுத் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது .
 
 
இக்கூட்டத்திற்கு கணக்காய்வு அத்தியட்சகர் ரொபர்ட் அலோசியஸ் ,பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன் , மற்றும் கணக்காய்வு திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இக்கூட்டத்தில்  கணக்காளரினால் 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகள் , கணக்காய்வு பற்றிய விடயங்களின் முன்னேற்றங்கள் பற்றிய அறிக்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு, கணக்குக் கிளை, நிருவாக கிளை, பதிவாளர் கிளை, நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு, சமுர்த்தி கிளை, மற்றும் சமுர்த்தி வங்கிகள், Passport &NIC, சிறுவர் பெண்கள் பிரிவு, ஆகிய பிரிவுகளின் முன்னேற்ற அறிக்கை விளக்க காட்சிகள் மூலம் தெளிவுபடுத்தப் பட்டது.
 
அத்துடன் Investigation  முறைப்பாட்டின் படி அலுவலக ரீதியான சில பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டதுடன் அதனை சீர் செய்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
 
மேலும் கணக்காய்வு அத்தியட்சகர் மற்றும் பிரதம உள்ளக  கணக்காய்வாளர் ஆகியோரினால் அலுவலக கடமைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளையும் கருத்துக்களையும்  தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள், பதவி நிலை உதவியாளர்கள், கிளைத் தலைவர்கள், மற்றும் பதவி நிலை உதவியாளர்கள், விடய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2025 1st Amc metting 6AMCFAT 01MY FAT

 

 

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் 2024 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது 2024.01.18 ஆந் திகதி வியாழக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான  ஏ.எல்.எம்.அதாவுல்லா (பா.உ) அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இக்கூட்டத்தின் போது கடந்த அபிவிருத்தி கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரினால் விரிவாக ஆராயப்பட்டதுடன் தீர்மானங்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
 
மேலும் இக் கூட்டத்தில் எதிர்காலத் திட்டங்கள் சம்பந்தமான விடயங்கள் மற்றும் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின்  மீளாய்வுகளும் இடம்பெற்றதுடன் மிக முக்கியமாக காத்தான்குடி பிரதேசத்தில் நிலவுகின்ற வெள்ள அனர்த்தம் சம்பந்தமான விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா, மற்றும் பிரதேச செயலகப்பிரிவின் திணைக்கள தலைவர்கள், மற்றும் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மீனவர் சங்க உறுப்பினர்கள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர்  எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
 
 
காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவைத் திணைக்களத்தின் PSDG வேலைத்திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு  (22) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
 
பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களின் தலைமையில் இக்கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன. 
 
இக் கொடுப்பனவுகள் காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்திற்கு
 ரூ. 194500/= உம், வலது குறைந்தோர் அமைப்பிற்கு ரூ.194500/= பெறுமதியான காசோலைகள் பிரதேச செயலாளரால் வழங்கி வைக்கப்பட்டன.
 
இக் காசோலையானது இல்லங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் கொள்வனவு செய்வதற்காக வழங்கி வைக்கப்பட்டதுடன்
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா , சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சீ.நஜுமுதீன், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக காத்தான்குடியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை (02) ஆந் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களுக்கு வருகை தர முடியாமல் தங்களது வீடுகளில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு  காத்தான்குடி ஹைறாத் பள்ளிவாயல் நிருவாகத்தினரால் சமைத்த உணவு  வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
இக் களவிஜயத்தின் போது காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்  சயந்தன், மாவட்ட இடர் முகாமைத்துவ உத்தியோகத்தர் சுரேஸ்  , மாவட்ட ஊடக தகவல் அதிகாரி வீ.ஜீவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top