எமது நோக்கு

இலங்கையின் அதிஉயர் வாழ்க்கைத் தரம் கொண்ட மக்களையுடைய காத்தான்குடி பிரதேசதம்

எமது கொள்கை

பயன்விளைவுள்ள பிரதேச மட்ட நிர்வாகத்தினூடாக காத்தான்குடி மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துதல்.
 
 

காத்தான்குடி செயலகப் பிரிவு தொடர்பான அடிப்படைத் தகவல்கள்

1.
பிரதேசம் பற்றிய தகவல்கள் :

மட்டக்களப்பு மாவட்டம் 14 பிரேதேச அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ; மண்முனை வடக்கு, மண்முனைப் பற்று , போரதீவுப் பற்று, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று, கோரளைப் பற்று, காத்தான்குடி, மண்முனை தெற்கு எருவில் பற்று, மண்முனை தென் மேற்கு,ஏறாவூர் நகர், கோரளைப்பற்று மத்தி,  கோரளைப்பற்று வடக்கு என்பவையாகும்.


காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 13344 ஆகும். சனத்தொகை ஆண்கள் 23967 பெண்கள் 24907  மொத்தம் 48874 ஆகும்.


இவர்களில் பெரும்பாலானவர்கள் வியாபாரம், கைத்தொழில் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளில் ஈடுபட்டிருப்பதுடன் வியாபாரமே பிரதான தொழிலாகக் காணப்படுகிறது. தென் கிழக்காசிய நாடுகளில் அதி கூடிய சனத்தொகை அடர்த்தி கொண்ட பிரதேசமாக காத்தான்குடி விளங்குவது ஒரு விசேட அம்சமாக அமைவதுடன் இங்கு வாழுகின்ற மக்கள் அனைவரும் முஸ்லீம்களாகவும் காணப்படுகின்றனர்.

2.இட
அமைவு:
மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்திய பகுதியாக விளங்குகின்ற காத்தான்குடிப் பிரதேசம் 2.56km2 நிலப்பரப்பினையும், 1.33km2 நீர்ப்பரப்பினையும் கொண்டுள்ளது. இது மாவட்டத்தின் மொத்தப் பரப்பின் ௦.15% ஆகும்.

3.எல்லைகள்:
காத்தான்குடிப் பிரதேசப் பிரிவின் எல்லைகளாவன:

வடக்கு : மண்முனை வடக்கு

கிழக்கு : வங்காள விரிகுடா (கடல்)
தெற்கு : மண்முனைப் பற்று
மேற்கு : மட்டக்களப்பு வாவி

"
கஹ்தான்" என்று அழைக்கப்பட்ட அரேபிய நாட்டிலிருந்து வருகை தந்த ஒரு முஸ்லிம் வியாபாரி இப் பிரதேசத்துப் பெண் ஒருத்தியை மணந்து வாழ்ந்ததன் காரணமாக  வரலாற்று ரீதியாக இப் பிரதேசம் "காத்தான்குடி" என்ற பெயர் கொண்டு அழைக்கப்படக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.

c. கிராம உத்தியோகத்தர் பிரிவு  / நிர்வாக கிராம உத்தியோகத்தர் பிரிவு

காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குற்பட்ட பிரதேசமானது 18 நிர்வாக கிராம உத்தியோகத்தர் பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளாவான

 

தொ. இல

கி.உ பிரிவு குறியீடு

கி.உ பிரிவின் பெயர்

ஆதிக்கப் பரப்பு

(sq.km)

01

162

காத்தான்குடி - 06

0.335

02

162A

காத்தான்குடி - 06 தெற்கு

0.42

03

162B

காத்தான்குடி - 06 மேற்கு

0.33

04

164

காத்தான்குடி - 04

0.20

05

164A

காத்தான்குடி - 05

0.45

06

164B

காத்தான்குடி - 05 தெற்கு

0.30

07

164C

காத்தான்குடி - 04 மேற்கு

0.30

08

165

காத்தான்குடி - 03

0.20

09

165A

காத்தான்குடி - 03 மேற்கு

0.25

10

165B

காத்தான்குடி - 03 கிழக்கு

0.285

11

166

காத்தான்குடி - 02

0.20

12

166A

காத்தான்குடி - 02 வடக்கு

0.25

13

167

காத்தான்குடி - 01

0.25

14

167A

புதிய காத்தான்குடி  வடக்கு

0.525

15

167B

புதிய காத்தான்குடி கிழக்கு

0.446

16

167C

புதிய காத்தான்குடி தெற்கு

0.636

17

167D

புதிய காத்தான்குடி மேற்கு

0.876

18

167E

காத்தான்குடி - 01 தெற்கு

0.25

Total

6.503

தகவல்  - திட்டமிடல் பிரிவு, பிரதேச செயலகம் - காத்தான்குடி.


News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top