காத்தான்குடியில் பிரதேச மட்ட சுற்றலா குழு அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் 2023.08.29 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வின் வளவாளர்களாக பேராசிரியர் Dr.A.M.முஸ்தபா PHD (SEUSL) , பேராசிரியர் Dr.KM.முபாறக் PHD (SEUSL) மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளர் (SEUSL) M.முகம்மது சிராஜ், ஆகியோர் கலந்து கொண்டு புதிய சுற்றுலா தலங்கள் மற்றும் அடையாளங்களை இனங்கண்டு அவை தொடர்பான விடயங்களை சேகரித்தல் , மற்றும் 
சுற்றுலா சார்ந்த அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு பிரதேச மட்டத்தில் காணப்படும் வளங்களை அபிவிருத்தி செய்யக் கூடிய இடங்கள் மற்றும் சமூக கலை கலாசார மத ரீதியான விழுமியங்களுக்கு உட்பட்ட வகையில் எவ்வாறு சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்தல், அதற்காக பிரதேச மட்ட சுற்றலா  குழுவொன்றை நிறுவுதல் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
 
இந்நிகழ்விற்கு உதவி திட்டமிடல் பணிப்பாளர், நகரசபை நிருவாக உத்தியோகத்தர், IWARE நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர், EDO,SDO, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி பிரதேச செயலக 2023 ஆம் ஆண்டிற்கான 5வது பிரதேச தினக் கூட்டமானது (28) திங்கட்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
பிரதேச தினக் கூட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் மாத்திரம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்க்கப்படுமென பிரதேச செயலாளரால் வலியுறுத்தப்பட்டது.
 
மேலும் இக் கூட்டத்தில் விவசாய போதனாசிரியை அவர்களால் சமுர்த்தியினால் வழங்கப்பட்ட விதைகளை அதிகமான பயனாளிகளினால் சரியான முறையில் நடப்பட்டு பாதுகாக்கப்படவில்லை.அதனால் பயனாளிகள் முழுப் பயனையும் பெறவில்லை எனவும் தெரிவித்தார்.
கருத்திட்ட முகாமையாளரினால் அவர்களுக்குரிய பயிற்சிகள் வழங்கப்பட்ட பின் விதைப்பைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 
வீடுகளிலும் சாப்பாட்டு கடைகளிலும் இருந்து வருகின்ற கழிவுகள் கான்களில் விடப்படுவதாகவும் இதனால் மக்களுக்கு சுகாதாரம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் எமது பிரதேசத்தை பாதுகாப்பது நாம் எல்லோருடைய பொறுப்பு எனவும் நகரசபை அதனை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
 
அத்துடன் நகரசபையினால் வியாபாரப்பதிவுகளை மேற்கொள்ளும் போது மிக முக்கியமாக தேசிய அடையாள அட்டை இலக்கம், தேசிய அடையாள அட்டையில் உள்ள விலாசம், பெயர் என்பவற்றை பரிசீலித்த பின் வியாபாரப் பதிவுகளை வழங்குமாறும், பிரத்தியேக வகுப்புகள் நடைபெறும் இடங்களுக்கான உரிமையாளர்கள் MOH, CRPO ஆகியோரிடமிருந்து அனுமதியினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் தொடர்ந்து SPHI மலசலகூடம், நீர் வசதி,  டெங்கு அபாயம், போன்றவைகளை மேற்பார்வையினை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
 
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுகளில் பெற்றோர்கள் அதிர்ப்தியடைவதாகவும் வழங்கப்படும் உணவுகள் போசாக்கு நிறைந்ததாகவும் ஆரோக்கியமானதாகவும் அமைவதற்கு பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோர்களிடம் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் DEO விடம் பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
SPHI அவர்களால் டெங்கின் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 
இக் கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், EDO,SDO, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர், செயலாளர்கள், மற்றும் அவற்றின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலாளர் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இறுதியாக உதவிப் பிரதேச செயலாளரின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
167A,167B,167C,167D,
162,162A,162B,166A ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அரச காணியில் குடியிருக்கும் அளிப்பு பத்திர உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள அளிப்பு பத்திரங்களில் தங்களது தேசிய அடையாள அட்டையில் உள்ளவாறு பெயர்திருத்தம் செய்வதற்காக பிரதேச  செயலகத்தினால் நாளை 2023.08.24 ஆந் வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் வழங்க இருக்கும் சேவையில் மேற்படி தேவை உள்ளவர்கள் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு பிரதேச செயலாளர் கேட்டுக் கொள்கின்றார்.
 
சேவையினை பெறவரும் போது அழிப்பின் மூலப் பிரதி, தேசிய அடையாள அட்டை, பெயர் வித்தியாசத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களான பிறப்புப் பதிவின் மூலப் பிரதி, வங்கிப் புத்தகம், அல்லது கடவுச்சீட்டு ஆகியவற்றுடன் உரிய நேரத்திற்கு சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்ள படுகின்றீர்கள்.
 
தகவல் - 
பிரதேச செயலாளர்
பிரதேச செயலகம்
காத்தான்குடி
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தினால் குடிசன வீட்டு வசதிகள் தொகைமதிப்பு நிரல்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கான மூன்று நாள்(21,22,23) பயிற்சி பட்டறையானது 2023.08.21ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளரும்  , பிரதேச பிரதி தொகைமதிப்பு ஆணையாளருமாகிய உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இப்பயிற்சி பட்டறையில் காத்தான்குடி பிரதேச செயலக மேற்பார்வை உத்தியோகத்தர்கள், வட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், மற்றும் நிரற்படுத்தல் உத்தியோகத்தர்கள் என 34 பேர் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற்றுக் கொண்டனர்.
 
இப் பயிற்சியின் வளவாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட புள்ளிவிபரவியல் உத்தியோகத்தர் மணிவண்ணன், தவேந்திரன், திருமதி.யோகராசா மற்றும் புள்ளிவிபரவியல் அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் முர்சித், ஆகியோரினால் பயிற்சி வழங்கப்பட்டது.
 
இந் நிகழ்விற்கு உதவிப் பிரதேச செயலாளரும் பிரதேச உதவித் தொகை மதிப்பு ஆணையாளருமாகிய திருமதி.எம்.எஸ்.சில்மியா, மாவட்ட புள்ளிவிபரவியலாளரும், உதவி தொகை மதிப்பு அத்தியட்சகருமான எம்.ஜெய்த்தனன் மற்றும் நிருவாக கிராம உத்தியோகத்தர் எம். எம். எம்.ஜரூப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
167A,167B,167C,167D,
162,162A,162B,166A ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அரச காணியில் குடியிருக்கும் அளிப்பு பத்திர உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள அளிப்பு பத்திரங்களில் தங்களது தேசிய அடையாள அட்டையில் உள்ளவாறு பெயர்திருத்தம் செய்வதற்காக பிரதேச  செயலகத்தினால் நாளை 2023.08.24 ஆந் வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் வழங்க இருக்கும் சேவையில் மேற்படி தேவை உள்ளவர்கள் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு பிரதேச செயலாளர் கேட்டுக் கொள்கின்றார்.
 
சேவையினை பெறவரும் போது அழிப்பின் மூலப் பிரதி, தேசிய அடையாள அட்டை, பெயர் வித்தியாசத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களான பிறப்புப் பதிவின் மூலப் பிரதி, வங்கிப் புத்தகம், அல்லது கடவுச்சீட்டு ஆகியவற்றுடன் உரிய நேரத்திற்கு சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்ள படுகின்றீர்கள்.
 
தகவல் - 
பிரதேச செயலாளர்
பிரதேச செயலகம்
காத்தான்குடி

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
අගෝ2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ජූලි2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top