பிரதேச செயலக மட்ட அனர்த்த திட்டம் தயாரித்தல் தொடர்பான செயலமர்வானது (15)  செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இச் செயலமர்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா, நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , நூறானியா வித்தியாலயம், பதுறியா வித்தியாலயம், அன்வர் வித்தியாலயம், மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிரியர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இச் செயலமர்வின் வளவாளராக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், மற்றும் உத்தியோகத்தர்களினால் அனர்த்த முன்னாயத்த திட்டம் தயாரித்தல் தொடர்பான பல்வேறு விளக்கங்களும், கருத்துக்களும் வழங்கப்பட்டது.
 
மேலும் காத்தான்குடி பிரதேசம் நகர பிரதேசமாக இருப்பதால் விரைவாக ஏற்படக்கூடிய வெள்ளங்கள் பற்றிய விடயங்கள் கவனிக்கப்படுவதுடன், கான்கள் மற்றும் தோனாக்களில் விடப்படும் கழிவுகள் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்டது. 
 
அத்துடன் மழை காலங்களில் இந்த தோனாக்கள் மற்றும் கான்கள் நிரம்பி வழிகின்ற போது சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் சம்பந்தமாகவும் இத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என்ற விடயமும் தெரிவிக்கப்பட்டது.
 
 
 
சமுர்த்தி உதவி பெறும் வறுமையான குடும்பத்தில் உள்ள பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கமைவாகவும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தரின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடியைச் சேர்ந்த தனவந்தரிடமிருந்து  5 பாதணிகள் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன்
 அதனை  166A, 167A   ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கு 2023.08.14 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களால் மாணவர்களின் பெற்றோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
 
இந் நிகழ்வில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அன்சார்  கலந்து  கொண்டிருந்தார்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் காத்தான்குடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரின் ஒழுங்கு படுத்தலில் காத்தான்குடி பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர்களுக்கான சுகவனிதையர் கிளினிக்கானது 2023.08.10 ஆந் திகதி காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
 
இக் கிளினிக்கில் உயரம், நிறை, குருதி அமுக்கம், மார்பகப் பரிசோதனை, மற்றும் கர்ப்பப்பை கழுத்து பரிசோதனை ஆகியன தாதிய சகோதரிகளால் மேற்கொள்ளப்பட்டதுடன் உத்தியோகத்தர்கள் சிறந்த பயனைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி (12.08.2023) காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் இளைஞர் கழக உறுப்பினர்களுக்கும் ஏறாவூர் நகர் பிரதேச  இளைஞர் கழக உறுப்பினர்களுக்கும் இடையிலான கரப்பந்து போட்டித் தொடர்  2023.08.13 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
 
 
இதில் ஏறாவூர் நகர இளைஞர் கழக சம்மேளனத்தின் அல்-பாஸி இளைஞர் கழகம் முதலாம் இடத்தினையும், காத்தான்குடி  சமூக மேம்பாட்டு  இளைஞர் கழகம் (SSYC) இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.
 
 
 இப் போட்டித் தொடரில் 1ம் இடத்தினைப் பெற்ற அணிக்கான வெற்றிக் கிண்ணம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் 2ம், 3ம், 4ம் இடங்களைப் பெற்ற அணிகளுக்கு இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டுப் பொருட்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
 
இந்நிகழ்வில் முன்னாள் ஏறாவூர் நகர சபையின் தவிசாளரும் Voice of Eravur அமைப்பின் தலைவருமான MIM. தஸ்லீம் அவர்கள் கலந்து  சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக வாய்மொழி, கையெழுத்து மூலமான போட்டிகளை மாணவர்களின் இலக்கிய ஆற்றுகை, மற்றும் கலை ஆகியவற்றின் வெளிப்பாடுகளை ஊக்கப்படுத்துவதற்காக வருடாவருடம் பிரதேச மட்ட இலக்கிய போட்டித் தொடர் இடம் பெற்று வருகின்றது.
 
அந்தவகையில் 2023 ஆம் ஆண்டிற்கான பிரதேச மட்ட இலக்கிய போட்டித் தொடரானது 02, 08.08.2023 ஆகிய இரு தினங்களில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இப் போட்டித் தொடரில் 180 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிகழ்வின் நடுவர்களாக இசைத்துறை விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம்,கல்லடி பிரிசில்லா ஜோர்ஜ், காத்தான்குடி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.யுவசாந்தி சிறிஸ்காந்த ரூபன், திருமதி.ரேணுகா அர்ச்சுனன், திருமதி.டிஜிசார்தினி தேவரூபன், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், மண்முனை வடக்கு திருமதி.தானியா தனுசாந், அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட செயலகம், மட்டக்களப்பு யோகேந்திரன் தனுஷியா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இப்போட்டித் தொடரானது கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்து உஷா, WDO யூ.ஆர்.எஸ்.றஸ்மின், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி.எச்.பீ.எம்.சில்மி தாஜுதீன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.எவ்.நுஹா ஆகியோரின் ஒழுங்கு படுத்தலில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
අගෝ2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ජූලි2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top