காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் முதியோர் தேசிய செயலகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 'திரியப்பியச' வீடானது 2022.02.02 ஆந் திகதி புதன்கிழமை பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
காத்தான்குடி முதலாம் குறிச்சி 167E கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் முதியோர் அலிமா உம்மாவிற்கு 3 இலட்சம் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடு கையளித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிப்பரதேச செயலாளர் திருமதி.எஸ்.எம்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்திரா, சமூக சேவை உத்தியோகத்தர் திரு.எஸ்.ஏ.சீ.நஜிமுதீன், 167E கிராம உத்தியோகத்தர் திரு.ஏ.ஜீ.ஏ.றசாக், முதியோர் மேம்பாட்டு உதவியாளர் திருமதி.ஹனாதி மபாஸ், ஸம் ஸம் முதியோர் அமைப்பின் தலைவர் திரு.எம்.ஹிஸைன், EDO திரு.எஸ்.சிவாகரன், ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


















