சுதந்திர தினக் கொண்டாட்டமானது 2022.02.04 ஆந் திகதி முற்பகல் 8.19 மணிக்கு பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டுக்காக உயிர்நீர்த்த இராணுவ வீரர்களை நினைவு கூர்ந்து 02 நிமிட மௌன வணக்கம் செலுத்தப்பட்டதுடன் இறைவணக்கமும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் உரையாற்றுகையில் கொவிட் 19 கொரோணா தொற்று காரணமாக அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டு சிரமத்திற்குள்ளாகியிருக்கும் இக்கால கட்டத்தில் அரச உத்தியோகத்தர்களாகிய நாங்கள் மேம்பட்ட சேவையினை வழங்குவதன் மூலம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் எனத் தெரிவித்திருந்தார்.
நிருவாக உத்தியோகத்தர் திருமதி.எஸ்.ஜே.எம்.ஜலால்தீன் அவர்களது ஒழுங்கமைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்திரா, நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ் , கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் ஏனைய செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.



















