காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான மற்றும் திறன் மிக்க சேவைகளை வழங்கும் நோக்கில் ஏற்கனவே நடைமுறையில் காணப்பட்ட டிஜிட்டல் சேவைகள் மீளாய்வு செய்யப்பட்டு, புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இப்புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் சேவைகளின் அறிமுக நிகழ்வு கடந்த 25.05.2026 திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜுத் அவர்களின் தலைமையில்  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர்,சமுர்த்தி தலைமையக முகாமையாளர், பிரிவு தலைவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது,

1. Front office management system.

(முன்னரங்கு அலுவலக முகாமைத்துவ முறைமை)

2. Public Portal for appointment and complaints.

(முன்பதிவு மற்றும் முறைப்பாட்டு இணையத் தளம்).

3. Inventory management system.

4. Citizen management system.

ஆகிய நான்கு இணையத் தள முறைமைகளும் புதிய வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன.

இம்முறைமைகள் ஊடாக பொதுமக்களின் தேவைகள் துரிதமாக நிறைவேற்றப்படுவதுடன், அலுவலக சேவைகள் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் தொழில்நுட்பமயமான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதேச செயலக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) பிரிவு உத்தியோகத்தர் எம்.எம். ரசுல்ஷா அவர்களினால் தெரிவிக்கப்பட்டது. மேலும், இத்திட்டம் அரச சேவைகளை இலத்திரனியல் மயமாக்கும் முயற்சியின் ஒரு முக்கிய முன்னேற்றமாகவும் கருதப்படுகின்றது.

பிரதேச செயலகம் – காத்தான்குடி

.WhatsApp Image 2025 08 11 at 3.11.48 PMCaptureinvCapture.JPG3Capture.JPG4inve3inven2cit2cit3citi1inven2inve3

News & Events

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
Aug2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
Aug2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
Jul2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top