காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சுனாமிப் பேரழிவு காரணமாக உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் வகையிலும் அனர்த்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சுனாமிப் பேரலையின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது 2023.12.26 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.20 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் இடம் பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி யானது அரைக்கம்பத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரினால் அனர்த்த முன்னாயத்தங்கள் சம்பந்தமான விடயங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் காணப்படும் முகாமைத்துவ குழுக்கள் அனர்த்தம் ஏற்படுகின்ற வேளையில் எவ்வாறு செயற்பட வேண்டும். அனர்த்தத்திலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம். எம்.எம்.ஜரூப் மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






















