காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டமானது இன்று (04) வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக விதாதா வள நிலையத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்திற்கு பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி.ஆர்.காயத்ரி அவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளரால் கணக்கறிக்கைகள், உள்ளக கணக்காய்வு பிரிவு அறிக்கைகள், சமுர்த்தி விசேட கொடுப்பனவுகள், மற்றும் காணி என்பன விளக்க காட்சிகள்(Presentation) மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் ஆலோசனைகளும் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
பிரதம உள்ளக கணக்காய்வாளர் கருத்து தெரிவிக்கையில் காத்தான்குடி பிரதேச செயலகமானது நிதி, நிருவாகம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் மிகவும் சிறந்த முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இதற்காக பிரதேச செயலாளர் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இக் கூட்டத்திற்கு பிரதேச செயலகத்தின் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள், பதவி நிலை உதவியாளர்கள், மற்றும் விடய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக கணக்காளர் செல்வி.கே.சித்ரா அவர்களின் நன்றியுடன் கூட்டம் நிறைவு பெற்றது.




















