காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் இவ்வாண்டிற்கான இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது 2023.07.11 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சரும், காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான Z.A.நஸீர் அகமட் (எந்திரி) பா.உ அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் கடந்த ஆண்டில் நடைமுறைப் படுத்தப்பட்ட திட்டங்களின் மீளாய்வும், இவ்வாண்டில் நடைமுறைப் படுத்தப்பட்ட/ நடைமுறைப் படுத்தப்படும் திட்டங்களின் மீளாய்வு மற்றும் திணைக்கள ரீதியான பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் த.நிர்மலராஜ் பிரதேச செயலகப் பிரிவின் திணைக்கள தலைவர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
























