கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது இன்று (10) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு ஏற்பாடுகள் மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் நலன்புரி நன்மைகள் சபையினால் மேற்கொள்ளப்படும் மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பாக இதுவரை 4812 மேன்முறையீடுகளும் 115 ஆட்சேபனைகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது தொடர்பாக கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பிரதேச செயலாளரால் வினவப்பட்டதுடன் தங்களிடம் கிடைக்கப் பெற்ற விண்ணப்ப படிவங்கள் அனைத்தையும் இன்றுடன் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து நிறைவு செய்யுமாறும் பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு ஆய்வுத் திட்டத்தில் 13575 வீடுகளில் ஆய்வுகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் 2401 வீடுகள் நிறைவடையவில்லை எனவும் அதனை விரைவாக நிறைவு செய்யுமாறு Gso, Edo, Sdo, Do ஆகியோரிடம் பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ECDO,LAND, HRDA,SHQ,WDO,DO(மத்தியஸ்த சபை) , மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆகிய உத்தியோகத்தர்களிடம் வேலை முன்னேற்றங்கள் தொடர்பாக பிரதேச செயலாளரால் மீளாய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




















