"இளவயதினருக்கான ஒரு செய்தி" எனும் சமுதாய அடிப்படை வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தின கொடி வேலைத்திட்டத்தின் கீழ் " புகைத்தலிருந்து மீண்டதோர் தேசம் மகிழ்ச்சி நிறைந்த தோர் கிராமம்" என்ற தலைப்பிற்கு அமைய பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கும் வழிகாட்டல்களுக்கும்அமைய சமுதாய அடிப்படை அமைப்பின் இளைஞர்களுக்கான மென் பந்து கிரிக்கட் போட்டியானது 2023.06.22 ஆந் திகதி காத்தான்குடி ஹிஸ்புல்லா பொது மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதேச செயலாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வங்கி வலய உதவியாளர்கள், சமுதாய அமைப்பின் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் இரண்டு அணிகள் பங்குபற்றியதுடன் காத்தான்குடி வலயம் சார்பாக ஒரு அணியும் புதிய காத்தான்குடி வங்கி வலயம் சார்பாக அல்-மதினாஸ் அணியும் போட்டியில் கலந்து கொண்டது.
இப்போட்டிக்கு எச்.எம்.ரமீஸ் மற்றும் ஏ.ஏ.றிஸ்வி நடுவர்களாக கடமையாற்றி இருந்ததோடு
இறுதிச் சுற்றான மாவட்ட மட்ட போட்டிக்கு புதிய காத்தான்குடி வங்கி வலயம் சார்பாக விளையாடிய 167B பிரிவு அல்-மதினாஸ் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




















