காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பிரிவின் ஒழுங்குபடுத்தலில் பாரம்பரிய விளையாட்டு விழாவானது 2023.06.08 ஆந் திகதி வியாழக்கிழமை முற்பகல் 8.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் காத்தான்குடி சிறுவர் இல்லத்தில் இடம் பெற்றது.
இவ்விளையாட்டு விழாவில், 68 சிறுவர் இல்ல சிறார்கள் பங்குபற்றியதுடன் மாணவர்களின் கலை ஆர்வம் மற்றும் மனரீதியான ஆற்றுப் படுத்தல் செயற்பாட்டினையும் மையப்படுத்தியதாக முட்டி உடைத்தல், தேசிக்காய் ஓட்டம், யானைக்கு கண் வைத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், பணிஸ் சாப்பிடுதல், குளம் கரை, சுரைக்காய் இழுத்தல், போன்ற விளையாட்டுகள் இடம் பெற்றது.
இவ்விளையாட்டு நிகழ்விற்கு சிறுவர் இல்ல பொறுப்பாளர் திரு.எவ்.எம்.மஜித், கிராம உத்தியோகத்தர் திருமதி.மபாஸா சுல்பிகார், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.எம்.நிஸ்றின், NDDCB உத்தியோகத்தர்களான திரு.எஸ்.சந்திரகாந்தன், திரு.பீ.கோவிந்தராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.



















