2021 உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் சிறுவர்களுக்கான சித்திரப்போட்டி, குறுநாடகப்போட்டி, (மட்டுப்படுத்தப்பட்ட/திறந்த) மற்றும் குறுந்திரைப்படப் போட்டி (மட்டுப்படுத்தப்பட்ட/திறந்த) போன்ற போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இப் போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் சிறார்கள் பின்வரும் நிபந்தனைகளுக்கேற்ப விண்ணப்பப்படிவங்களை 2021.08.09 ஆந் திகதிக்கு முன்னர்
சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் (CRPO)
சிறுவர் பிரிவு
பிரதேச செயலகம்
காத்தான்குடி.
தொலைபேசி இல -0776079627
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
 
 
 
தேசிய விளையாட்டு தினமான ஜுலை 31 ஆந் திகதியினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2021.07.30 ஆந் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 8.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களின் வழிகாட்டுதல்களுக்கும் ஆலோசனைக்கமைவாகவும், நிருவாக உத்தயோகத்தர் திருமதி.எஸ்.Nஐ.எம்.ஐலால்டீன் அவர்களின் நெறிப்படுத்தலிலும் விளையாட்டு உத்தியோகத்தர் அவர்களின் ஒழுங்குபடுத்தலுடனும் தேசிய விளையாட்டு தினம் நடைபெற்றது.
இந் நிகழ்வின் போது முதலில் பிரதேச செயலாளரின் தேசிய கொடியேற்றப்பட்தோடு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரின் உரை இடம் பெற்றது. அதன் போது அனைத்து உத்தியோகத்தர்களும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற்பயிற்சி இன்றியமையதாவையாகும். ஒவ்வொருவருடைய ஆரோக்கியமற்ற தன்மை எம்மையும், குடும்பத்தையும் , சமூகத்தையும் பாதிக்கின்றது. எனவே உத்தியோகத்தர்களாகிய நாம் நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இதே போன்று அலுவலகங்களில் எமது சுகயீனம் எமது கடமையையும் ,அலுவலக கடமையினையும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடும். அது மட்டுமன்றி போசாக்கான உணவுகளை உட்கொள்வதுடன் உடல் உள ஆரோக்கியத்தை பேணிக்கொள்ள வேண்டும். கடைகளில் விற்கப்படும் உணவுகளை உட்கொண்டு அதன் சுவைக்கு அடிமையாகி எமது ஆரோக்கியத்தை இழந்து விடக்கூடாது. எனும் பல ஆரோக்கியமான கருத்துக்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் விளையாட்டு உத்தியோகத்தரால் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் 15 நிமிட உடல் அப்பியாசப்பயிற்சிகளை சிறப்பாக வழங்கினார்.

சமுர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பிக்கப்பட்டது. கொவிட் 19 அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையை காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர் அவர்களால் 12.04.2021 திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அரசாங்கத்தினால் நாடு éராகவும் மேற்கொள்ளப்படும் அந்த வேலைத்திட்டம் தொடர்பாக காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில்  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 18 கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கும் கூட்டமும் 12.04.2021 திகதி பிரதேச செயலாளர் தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

இதில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா,கணக்காளர் கே.சித்திரா,சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பத்மா ஜெயராஜ்,உட்பட சமுர்த்திப்பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். 

இதையடுத்து 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையை பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர் அவர்களால் முதலில் 164A, மற்றும் 166A ஆகிய பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

மேற்படி விவசாய அமைச்சி4னூடாக இச் செயற்திட்டத்தினை வெற்றி பெறச் செய்வதற்காக பிரதேச மட்டத்தில் விழிப்புட்டல்களுடன் கூடிய வேலைத்திட்ங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் சேதனைப்பசளை தயாரித்தல் செயற்றிட்டமானது 2021.07.20 ஆந் திகதி புதிய காத்தான்குடி தெற்கு(167C) கிராம உதத்தியோகத்தர் பிரிவில் ஆமினாப்பள்ளிவாயல் மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட சேதனைப்பசளை உற்பத்தியாளர்களுக்கு சேதனைப்பசளையினை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றிய செயல்முறைப் பயிற்சி வளவாளராக கமநல கேந்திர நிலையம்,காத்தான்குடி விவசாயப் போதனாசிரியர் திருமதி.றமீஸ் முபிதா அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும் இப்பயனாளிகளுக்கான மேலதிக பயிற்சியும் விகர்தல்களும் எதிர்வரும் 2021.07.27 ஆந் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.
வானவில் பசுமை உற்பத்தித் திறன் குழுவினரால் 3R முறைமையினைப் பயன்படுத்தி Covid – 19 நிவாரணப்பணிகளின்போது வெளியேற்றப்பட்ட காட்போட் பெட்டிகளைப் பயன்படுத்தி கோவைகளை வைப்பதற்கான File holders தயாரிக்கப்பட்டு அவை கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு 05-06-2021 அன்று விதாதா வள நிலையத்தில் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீpதர் தலைமையில் இ;டம்பெற்றது.
இந்நிகழ்விற்கு நிருவாக உத்தியோகத்தரும் உற்பத்தித்திறன் ஒருங்கிணைப்பாளருமான திருமதி.SJM.ஐலால்தீன் மற்றும் பசுமை உற்பத்தித்திறன் குழுத்தலைவர் திருமதி.பு.ஐங்கரன் மற்றும் ஏனைய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
 

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top