Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குஅரசு சேவை மையங்கள்
முகப்பு
சுனாமி மற்றும் நிலநடுக்கம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு -2023
மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் ஏற்பாட்டிலும் காத்தான்குடி பிரதேச செயலக அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பிலும் சுனாமி மற்றும் நிலநடுக்கம் போன்ற அனர்த்தங்களுக்கான பிரதேச செயலக மட்ட அனர்த்த முகாமைத்துவ பங்குதாரர்களுக்கு அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான முகாமைத்துவ கருத்தரங்கானது 2023.05.22 ஆந் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கருத்தரங்கானது அண்மைக் காலமாக ஏற்படும் நில அதிர்வு தொடர்பாகவும், சுனாமி ஏற்படும் காரணங்கள், மற்றும் எவ்வாறு பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் போன்ற முன்னெச்சரிக்கை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இக் கருத்தரங்கில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு.ஏ.எஸ்.எம்.சியாத், மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் சிரேஸ்ட விரிவுரையாளர் (புவியியல் தொடர்பான) திரு.கே.கிருபைராஜா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பாக தெளிவூட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி கருத்தரங்கில் நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், நகர சபை உத்தியோகத்தர்கள், நூறாணியா, பதுறியா, மத்திய மகா வித்தியாலயம், அன்வர் வித்தியாலயம், ஆகிய பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





150 மணித்தியால சிங்கள மொழிப் பாடநெறியின் இறுதி நாள் நிகழ்வு
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அரச மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியால சிங்கள மொழிப் பாடநெறியானது கடந்த 2023.02.07 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டு அதன் இறுதி நாள் நிகழ்வானது 2023.05.21ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலாளர் திரு.உ .உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பாட நெறியில் 37 உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இப்பாடநெறியினை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப் பாடநெறியின் வளவாளராக கலந்து கொண்ட திரு.எஸ்.ஜெயராஜ் ஆசிரியருக்கு பிரதேச செயலாளரால் நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக உத்தியோகத்தர் திருமதி.எஸ்.ஜே.எம்.ஜலால்தீன், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், மற்றும் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் -2023
கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது 2023.05.22 ஆந் திகதி திங்கட்கிழமை முற்பகல் 8.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில் நடமாடும் சேவையானது எதிர்வரும் 2023.05.27 ஆந் திகதி மட்/ஆசிரியர் கலாசாலையில் நடைபெறவுள்ளதால் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் அனைத்து ஆவணங்களுடனும் முழுமையான முறையில் மக்கள் சேவையினை பெற்றுக் கொள்வதற்காக ஏற்பாடுகளையும்,
ஒழுங்குகளையும் மேற்கொள்ளுமாறும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
நலன்புரி வேலைத்திட்டத்தின் 2ம் கட்ட தெரிவு இறுதிக் கட்டத்தை 80% நிறைவு செய்துள்ளதாகவும் நான்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 25% நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்களை மிகவும் தெளிவான முறையில் பெற்றுக் கொண்டு தகுதியானவர்களுக்கு நலன்புரி நன்மைகளை பெற்றுக் கொடுக்குமாறும் இவ் வேலைத்திட்டத்தினை 2023.05.26 ஆந் திகதிக்குள் நிறைவு செய்யப்படள்ளதாகவும்
பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு ஆய்வுத் திட்டத்தில் 11329 வீடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் முழுமையாக முடிவடைந்துளளதாகவும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் முடிவு பெறவில்லை எனவும் அதனை விரைவாக செய்து முடிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காணி உத்தியோகத்தர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்,
சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர் ஆகியோரிடம் வேலை முன்னேற்றம் தொடர்பாக பிரதேச செயலாளரால் மீளாய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





சமூக பாதுகாப்பு சபையின் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத் திட்டத்தில் பிரதேச மற்றும் தேசிய அடிப்படையில் இலக்கினை நிறைவு செய்த உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு -2023
சமூக பாதுகாப்புச் சபையின் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத் திட்டத்தில் பிரதேச மற்றும் தேசிய அடிப்படையில் இலக்கினை நிறைவு செய்த உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது 2023.05.15 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணப்பதிகாரி திரு.ஏ.எம்.அமீன் அவர்கள் கலந்து கொண்டனர்.
அந்தவகையில் சமூக பாதுகாப்புச் சபையின் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத் திட்டத்தில் பிரதேச மற்றும் தேசிய அடிப்படையில் இலக்கினை நிறைவு செய்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.SMM.றபீக், திருமதி.YIZ.யஸ்மின் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.AL.அப்துல் அஸீஸ் ஆகியோருக்கு மெச்சுரைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


























