Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குஅரசு சேவை மையங்கள்
முகப்பு
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடவுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளும் ஆரம்ப நிகழ்வு
துரித சேவையினை வழங்கும் திட்டத்தின் கீழ் மக்களுக்கு தேவையான கடவுச் சீட்டுக்களை சிரமமின்றி அவர்களுடைய மாவட்டங்களில் பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடவுச் சீட்டினை வழங்கும் ஆரம்ப நிகழ்வு 2023.06.22 ஆந் திகதி வியாழக்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து கொண்டதுடன் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்ரா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்வோர் தெரிவு செய்யப்பட்ட புகைப்பட நிலையங்களுக்கு சென்று புகைப்படம் மற்றும் பதிவினை மேற்கொண்டு 03 நாட்களில் துரித சேவையாயின் ரூபா 15000 உம் 14 நாட்களில் பெற்றுக் கொள்ளும் சாதாரண சேவையாயின் ரூபா 5000 பணத்தினை இலங்கை வங்கி கிளையில் செலுத்திய பின் தங்களது கையடக்க தொலைபேசிக்கு பிரதேச செயலகத்திற்கு செல்லும் நாள், மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட குறுந்தகவல் கிடைத்ததும் பிரதேச செயலக ஆட்பதிவு திணைக்கள பிரிவிற்கு சென்று கைவிரல் அடையாளம் மற்றும் கையொப்பத்தினையும் உறுதி செய்து கடவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையினை நிறைவு செய்து கொள்ள முடியும்.
மேலும் கையடக்கத் தொலைபேசி மற்றும் வேறு முறைமைகள் (Computer) மூலம் இணையத்தில் கடவுச் சீட்டு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தவர்கள், புகைப்பட நிலையத்தில் புகைப்படங்களை பெறாதவர்கள் பிரதேச செயலகத்திற்கு சென்று புகைப்படம், மற்றும் கைவிரல் அடையாளம் ஆகியவற்றை வழங்கி கடவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையினை மேற் கொள்ள முடியும்.
இந் நிகழ்விற்கு ஆட்பதிவு திணைக்களத்திற்குரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.எவ்.பீ.எம்.அஹமட், திருமதி.கே.விஜயகுமார், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கீ.குகன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு புகைப்பட நிலைய சம்மேளனத்தின் தலைவர் மற்றும் செயலாளர், தொழில்நுட்ப ஆலோசகர், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

















































