காத்தான்குடி பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்டத்திலான சிறு விற்பனைக் கண்காட்சி (25) செவ்வாய்க்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.
 
இவ்விற்பனை கண்காட்சியில் உற்பத்தியாளர்களினால் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், பாதணிகள், இனிப்புப் பண்டங்கள், ஆடைகள், போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கொள்வனவில் ஈடுபட்டனர்.
 
இந் நிகழ்விற்கு மாவட்ட சிறு தொழில் அபிவிருத்தி சந்தைப்படுத்தல் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் SR.ராஜரெட்ணம், காத்தான்குடி பிரதேச செயலக சிறு தொழில் முயற்சிப்பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான S.சனோகாந், திருமதி.பி.சிந்துஜா, மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.எம்.சந்திய குமாரி, திருமதி.MRF.பர்வின், திருமதி.S.பிலமேந்திரன் (NADA) ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இளைஞர், யுவதிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருமுகமாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 43வது தடவையாக நடாத்தப்படுகின்ற தேசிய இளைஞர் விருதுப் போட்டிகள்  மாகாண மற்றும் தேசிய மட்டத்தில்  நடைபெறவுள்ளன.
 
*தமிழ் மொழிப் போட்டிகள்*
 
1.அறிவிப்பாளர்
2.பேச்சு
3 இளம் பாடகர்
 
*வயதெல்லை: 15 - 29* (1994.03.24ம் திகதிக்கு பின்னரும் 2008.03.24ம் திகதிக்கு முன்னரும் பிறந்தவர்கள்).
 
*காலம்: 2023.07.29 (சனிக்கிழமை).*
 
*நேரம்: காலை 9.30  மணி.*
 
 *இடம்: மட்/ மஹஜன கல்லூரி மண்டபம்.*
 
மேலதிக தகவல்களுக்கு: 
AW. இர்சாத் அலி,
இளைஞர் சேவை உத்தியோகத்தர்,
பிரதேச செயலகம்,
காத்தான்குடி.
0771149822/ 0757551982.
 
 
 
 
ReplyForward
தேசிய உணவுப் பாதுகாப்பு வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி கிழக்கு 167B கிராம உத்தியோகத்தர் பிரிவு அன்பர் சமுதாய அடிப்படை அமைப்பின் நிதிப் பங்களிப்புடன் MMV 2ம் லேனில் அமைந்துள்ள ஏ.ஹிதாயத்தும்மா என்ற பயனாளியின் வீட்டில் செய்கை பண்ணப்பட்டிருந்த மரக்கறி வகைகள் அறுவடை செய்யும் விழாவானது 2023.07.18 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களால் அறுவடை செய்து வைக்கப்பட்டது.
 
இவ்வறுவடையில் வாழை, வெண்டி, கத்தரி,புடோல், பப்பாசி, கீரை போன்ற மரக்கறி வகைகள் அறுவடை செய்யப்பட்டது.
 
இவ்வறுவடை விழாவில் உதவிப் பிரதேச செயலாளர், கருத்திட்ட முகாமையாளர், கருத்திட்ட உதவியாளர், மற்றும் பிரிவிற்கு பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காத்தான்குடியில் சமூக அடிப்படையிலான மாற்றுவழி பிணக்குத் தீர்வு பொறிமுறையின் கீழ் சமுதாய சனசமூக மத்தியஸ்த சபைகள் நிறுவுவதற்கான  புதிய அவை உறுப்பினர்களுக்கு  நியமனம் வழங்கும் நிகழ்வு  21.07.2023 வெள்ளிக்கிழமை மாலை 3:00 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில்  மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர்  M.ஹிஸ்புள்ளாஹ் அவர்களின் ஒருங்கிணைப்பில்
காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தி நடைபெற்றது  பெற்றது. 
 
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மடக்களப்பு  மாவட்ட நீதிபதி எச்.எம்.முஹம்மது பஸீல்  அவர்கள்  கலந்து கொண்டதுடன் 
மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் MIM.ஆஸாத் அவர்களின் பங்களிப்புடன்  கடிதங்களை வழங்கி வைத்தார்.
 
 புதிய மத்தியஸ்த சபையில் 14 பெண்களும் 20 ஆண்களுமாக 34 உறுப்பினர்கள் நியமனம் பெற்றனர் இச்சபையின் தவிசாளராக  MMM.மஃசூம்
அவர்களும், உப தவிசாளரக முபீதா றமீஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு நியமனம் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 
இந் நிகழ்விற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் செல்வி.கே.சித்திரா, நகரசபை செயலாளர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .
 
மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக மனித வள வேலை வாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து நடாத்தும் தொழிற் சந்தை மற்றும் தொழிற்கல்வி  கண்காட்சியானது இன்று (18) செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் அரச மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களும், தனியார் தொழில் வழங்கும் நிறுவனங்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களும் கலந்து கொண்டு தொழில் தேடும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் 
வழிகாட்டல்களையும் , ஆலோசனைகளையும் வழங்கியிருந்ததுடன் நூற்றுக்கு மேற்பட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு பயனடைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிழ்விற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, மாவட்ட இணைப்பாளர் ( மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம்) W.மைக்கல் கோலின், மாவட்ட செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.கருணாகரன், மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக மனித வள வேலை வாய்ப்பு திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.எஸ்.செல்வமலர், அஸ்மி தாஜுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
 

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top