Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குஅரசு சேவை மையங்கள்
முகப்பு
குடிசன வீட்டு வசதிகள் தொகைமதிப்பு -2024, நிரல் படுத்தும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி பட்டறை
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தினால் குடிசன வீட்டு வசதிகள் தொகைமதிப்பு நிரல்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கான மூன்று நாள்(21,22,23) பயிற்சி பட்டறையானது 2023.08.21ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளரும் , பிரதேச பிரதி தொகைமதிப்பு ஆணையாளருமாகிய உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இப்பயிற்சி பட்டறையில் காத்தான்குடி பிரதேச செயலக மேற்பார்வை உத்தியோகத்தர்கள், வட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், மற்றும் நிரற்படுத்தல் உத்தியோகத்தர்கள் என 34 பேர் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற்றுக் கொண்டனர்.
இப் பயிற்சியின் வளவாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட புள்ளிவிபரவியல் உத்தியோகத்தர் மணிவண்ணன், தவேந்திரன், திருமதி.யோகராசா மற்றும் புள்ளிவிபரவியல் அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் முர்சித், ஆகியோரினால் பயிற்சி வழங்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு உதவிப் பிரதேச செயலாளரும் பிரதேச உதவித் தொகை மதிப்பு ஆணையாளருமாகிய திருமதி.எம்.எஸ்.சில்மியா, மாவட்ட புள்ளிவிபரவியலாளரும், உதவி தொகை மதிப்பு அத்தியட்சகருமான எம்.ஜெய்த்தனன் மற்றும் நிருவாக கிராம உத்தியோகத்தர் எம். எம். எம்.ஜரூப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்புப் பொது மக்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் விடுக்கும் முக்கிய அறிவித்தல்
167A,167B,167C,167D,
162,162A,162B,166A ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அரச காணியில் குடியிருக்கும் அளிப்பு பத்திர உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள அளிப்பு பத்திரங்களில் தங்களது தேசிய அடையாள அட்டையில் உள்ளவாறு பெயர்திருத்தம் செய்வதற்காக பிரதேச செயலகத்தினால் நாளை 2023.08.24 ஆந் வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் வழங்க இருக்கும் சேவையில் மேற்படி தேவை உள்ளவர்கள் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு பிரதேச செயலாளர் கேட்டுக் கொள்கின்றார்.
சேவையினை பெறவரும் போது அழிப்பின் மூலப் பிரதி, தேசிய அடையாள அட்டை, பெயர் வித்தியாசத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களான பிறப்புப் பதிவின் மூலப் பிரதி, வங்கிப் புத்தகம், அல்லது கடவுச்சீட்டு ஆகியவற்றுடன் உரிய நேரத்திற்கு சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்ள படுகின்றீர்கள்.
தகவல் -
பிரதேச செயலாளர்
பிரதேச செயலகம்
காத்தான்குடி

அஸ்வசும நிவாரண வேலைத் திட்டதுடன் இணைந்ததாக சமுர்த்தி வேலைத் திட்டத்தினை நடாத்திச் செல்லல்
பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கமைவாக அஸ்வசும வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக சமுர்த்தி வேலைத்திட்டத்தினை நடாத்திச் செல்லுதல் தொடர்பாக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு 2023.08.17 வியாழக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் செயலமர்வின் வளவாளராக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ் அவர்கள் கலந்து கொண்டு சமுர்த்தி வேலைத்திட்டத்துடன் இனணைந்ததாக அஸ்வசும வேலைத்திட்டத்தினை நடாத்திச் செல்லுதல் தொடர்பாகவும், சமுர்த்தி திட்டம் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது, அதன் வளர்ச்சி, மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளில் ஏற்படும் மாற்றங்கள், என்பது தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
மேலும் காத்தான்குடி வங்கி முகாமையாளரினால் சமுர்த்தி திட்டம் தொடர்ந்து இயங்கிய வண்ணம் இருக்குமெனவும் அஸ்வசும பற்றி மேலதிக விளக்கங்களையும், இக் கூட்டத்தினால் மக்கள் அடையும் பயன்கள் பற்றி மக்களிடம் வினவப்பட்டதுடன் மக்களது சந்தேகங்களுக்கான விளக்கமளிக்கப்பட்டது.
இச்செயலமர்விற்கு சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர், வலய உதவியாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.