கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் காத்தான்குடி பிரதேச செயலக சமூக பராமரிப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் மற்றும் சுயதொழில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு 2022.01.12 ஆந் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு சமூக சேவை உத்தியோகத்தர் திரு.கு.யு.வு.நஜீமுதின் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். இந்நிகழ்வானது 09 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல்,மற்றும் Wheel Chair உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கணவனால் கைவிடப்பட்ட , கணவனை இழந்த ,கணவன் சிறையில் உள்ள,  பெண்கள் தலைமைதாங்கும் 06 குடும்பங்களுக்கு தையல் தொழில் ,சிறுகடை வியாபாரம்   செய்வதற்கு சுயதொழில் கொடுப்பனவு வழங்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக தையல் தொழிலுக்கு ரூபா 25,000 உம் சிறுகடை வியாபாரத்திற்கு ரூபா 20,000 உதவிப்பிரதேச செயலாளரால் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் பயனாளிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வருட இறுதி ஒன்றுகூடல் நிகழ்வானது 2022.01.19 ஆந் திகதி புதன்கிழமை புதிய காத்தான்குடி வங்கி முகாமையாளர் ஏ.எல்.இசட் பஹ்மி அவர்களது தலைமையில் காத்தான்குடி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வங்கி முன்னேற்ற செயற்பாடுகள், பொது மக்களுக்கும் சமுர்த்தி திட்டத்திற்கும் உள்ள தொடர்புகள், கடந்த கால முன்னேற்ற மீளாய்வுகள் ,வறுமை ஒளிப்பிற்கான நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக அதிதிகளால் விளக்கமளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கொவிட் 19 கொரோனா காலங்களில் தங்களது கடமைகளை சிறப்பாக மேற்கொண்ட சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களும், கௌரவ அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.எம்.சில்மியா , கணக்காளர் செல்வி.கே.சித்திரா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.பிரணவசோதி, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜிட், காத்தான்குடி வங்கி முகாமையாளர் எஸ்.எச்.முஸம்மில், திட்ட முகாமையாளர் திருமதி.எஸ்.கண்ணன், மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரிப்பயிலுனர்கள், கணனிப்பயிலுனர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

சமூக சேவைகள் அமைச்சினால் காத்தான்குடி சமூக பராமரிப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கான கல்விக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு 2022.01.26 ஆந் திகதி புதன் கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சமூக சேவை உத்தியோகத்தர் திரு.எஸ்.ஏ.சீ.நஜிமுதீன் அவர்கள் தலைமையில் சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.எம்.சில்மியா அவர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வானது பாடசாலை செல்கின்ற மாற்றுத்திறனாளிகளான 2 பிள்ளைகளுக்கு கல்விக்கொடுப்பனவாக ஒருவருக்கு ரூபா 10000 வீதம் ரூபா 20000 பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் உதவிப்பிரதேச செயலாளரால் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பயனாளிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.ராதிகா அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பொதுசேவைகள் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் 2021.12.20 ஆந் திகதிய கடிதத்திற்கமைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2022 ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு 2022.01.03 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் நிருவாகஉத்தியோகத்தர் திருமதி.எஸ்.ஜே.எம்.ஜலால்தீன் அவர்களது ஒழுங்கமைப்புடன் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அதற்கமைவாக 2022 புதுவருடத்தில் சமூகப் பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு அரச ஊழியர்களாகிய நாம் அனைவரும் அரச வளங்களை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்து நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மனப்பாங்கினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன் இவ்வருடத்தில் பலமான நாட்டை கட்டியெழுப்புவது அரச சேவையாளர்களாகிய எம்மனைவரினதும் பொறுப்பாகும் எனவும்; சுட்டிக்காட்டப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராணுவ வீரர்கள் உள்ளிட்ட தேசத்திற்காக உயிர்தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து 02 நிமிட அமைதி அனுஸ்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரச சேவை உறுதி உரையினை பிரதேச செயலாளரால் வாசிக்கப்பட அனைத்து உத்தியோகத்தர்களாலும் மொழியப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டது..அடுத்ததாக கொவிட்-19 தொற்று தொடர்பாக தனிநபர் பொறுப்பும் சமூக பொறுப்பு எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளரின் உரை இடம்பெற்றது.தொடர்ந்து பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்  நிருவாகத்திற்கான வைத்திய அதிகாரி மதிப்பிற்குரிய னுசு.ஆர்.நவலோஜிதன் அவர்களால் சுற்று நிருபத்திற்கமைவாக கொவிட் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஒவ்வொருவருக்கும் சமூகத்திலும் அலுவலக சூழலிலும் உள்ள பொறுப்புக்களை வலியுறுத்தும் வகையில் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கணக்காளர் செல்வி.கே.சித்திரா, உதவிப் பிரதேசசெயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மற்றும் மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.என்.கிருஸ்ணப்பிரியன் மற்றும்சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ் ஆகியோரின் உரை இடம்பெற்றது.அடுத்து இலங்கை சமூகபாதுகாப்பு ஓய்வூதியத்திட்டத்தின் 2021 ஆண்டு இலக்குகளை குறுகிய காலப்பகுதியில் அடைந்து கொள்வதற்காக அர்ப்பணிப்பான பங்களிப்புக்களை செய்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.எஸ்.எம்.எம்.றபீக், திருமதி.எம்.ஜ.எஸ்.ஜஸ்மின், திருமதி.ஏ.ஆர்.அனிஸா, மற்றும் விடய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி.எம்.எம்.எவ்.முபஸ்ஸறா ஆகியோருக்கு பிரதேச செயலாளரால் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.இந்நிகழ்வில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.பிரணவசோதி, உட்பட கிராம உத்தியோகத்தர்கள், சகல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன் திரு.றசூல்சா அபிவிருத்தி உததியோகத்தர் அவர்களும் நிகழ்ச்சிகளை இணைந்து தொகுத்து வழங்கியிருந்தார்.

 

 

 

"அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்" எனும் தொனிப்பொருளின் அடிப்படையில் தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தரின் முன்னெடுப்புடன் சிறுவர் தினக்கொண்டாட்டமானது 2021.10.01 ஆந் திகதி வெள்ளிக்கழமை பிரதேச செயலாளர் திரு.உ.உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் காத்தான்குடி 167A கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது சென்ற வருடம் போன்று சித்திரப்போட்டி, சிறுவர் குறுநாடகப்போட்டி, சிறுவர் குறுந்திரைப்படப்போட்டி, போன்ற போட்டி நிகழ்ச்சிகள் இன்றி மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் சௌபாக்கியா திட்டத்தின் கீழ் 'சூழல் நேயமிக்கவர்களாக சிறுவர்களை உருவாக்கி பட்டினி அற்ற மரங்கள் நிறைந்த தார்மீக நாடொன்றை உருவாக்குதல்' எனும் நோக்கேர்டு சிறுவர் சுற்றாடல் பாதுகாப்பு படையணியை தாபித்தல் மற்றும் ஒரு லட்சம் பலாமரக்கன்றுகளை நாட்டும் தேசிய நிகழ்வு நடைபெற்றது.
அதனடிப்படையில் சிறுவர்கள் பலாமரக்கன்றுகளை தங்கள் வீடுகளிலும் ,பொது இடங்களிலும் தங்கள் கரங்களால் நட்டு அதனை தொடர்ச்சியாக பராமரித்து வருவதுடன் இதற்கான மரம் வளரும் குறிப்புக்களுக்கான அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
அந்தவகையில் மரங்களின் வளர்ச்சியின்யின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு உலக சான்றிதழ்கள் சிறுவர் தினத்தின் போது வழங்கி வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. எஸ்.எம்.சில்மியா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் கழக உறுப்பினர்கள், சிறுவர் அபிவிருத்தி நிலைய சிறார்களும் கலந்து கொண்டனர்.அத்துடன் Covid-19 தொற்று காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட பங்குபற்றுனர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
May be an image of 4 people and people standingMay be an image of 1 person, child and standing
May be an image of 3 people, people standing, outdoors and text that says 'ලෝක ළමා දින සැමරුම 2021 உலக சிறுவர் கொண்டா CELEBRATION உலக சிறுவர் M යල්ලටම පෙර දරුවන னத்திற்கும் முன்னுரிமை குழந்தைச dren Before Everythin'
May be an image of 3 people, people standing and outdoors
May be an image of 2 people, people standing, tree and outdoors
 

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
අගෝ2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ජූලි2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top