கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுத்துவரும் "அத்தம" நிகழ்ச்சித்திட்ட இரண்டாம் கட்ட மாவட்ட மட்டத்திலான நிகழ்வு இன்று (19) காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பாடசாலை வாவிக்கரைப்பகுதியில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் , மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் M.S சில்மியா ,நிர்வாக கிராம உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், இளைஞர் விவகார உத்தியோகத்தர் ,பிரதேச செயலகத்தில் விளையாட்டு கழகங்கள் உட்பட தன்னார்வ நிறுவனங்களின் அங்கத்தவர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள், பிரதேச செயலகத்தின் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகத்தில் ஏனைய உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் பெருமளவில் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இராணுவ மற்றும் விமானப்படை , பொலிஸ் உயர் அதிகாரிகளும் முப்படையினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி நகர சபையின் பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் இச்சிரமதானம் இடம்பெற்றது.

நீண்டகாலமாக முறையான பராமரிப்பின்றி, பற்றைக் காடாகவும் பயனற்ற மரங்கள் மற்றும் செடிகள் வளர்ந்த நிலையிலும் காணப்பட்ட குறித்த வாவிக்கரை பகுதியினை சுத்தப்படுத்தி சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றி ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்குவதும் பொது இடங்களை தூய்மையாகப் பணி சுற்றுச்சூழலை பாதுகாத்து ஒரு நல்ல சமூகத்தை கட்டி எழுப்புவது இதன் முதன்மை நோக்கமாகும் .

112112113114115116117118119120121122

News & Events

14
Sep2026
மக்களுக்கான சிறந்த சேவைக்கு காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு மாவட்ட ரீதியில் முதலிடம். 

மக்களுக்கான சிறந்த சேவைக்கு காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு மாவட்ட ரீதியில் முதலிடம். 

2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டங்களில்...

Scroll To Top