2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டங்களில் விரிவுபடுத்தி, சேவைகளை மக்களுக்கு சிறப்பாகவும் வினைத்திறனுடனும் வழங்கியமைக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலகம் முதலிடத்தினை பெற்றுள்ளது.150150

இதனை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் நிகழ்வு 2026 செப்டெம்பர் 12ஆம் திகதி மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் (SVIAS) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதமர் கலாநிதி. ஹரிணி அமரசூரிய அவர்களினால் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட விருதினை, காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சீ. நஜிமுதீன் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.
ஜனாதிபதி நிதியத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகள் மற்றும் உதவிகளை மக்கள் மட்டத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்தி, தேவையுடைய மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய சேவைகளை துரிதமாகவும் வினைத்திறனுடனும் பெற்றுக்கொடுப்பதில் காத்தான்குடி பிரதேச செயலகம் மேற்கொண்ட அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கான அங்கீகாரமாக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இச்சாதனை, காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் அவர்களின் வழிகாட்டல் மற்றும் நிர்வாகத் திறனுக்கும், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. சில்மியா உள்ளிட்ட நிர்வாகக் குழுவினரின் மேற்பார்வைக்கும், சமூக சேவை உத்தியோகத்தர் திரு. நஜிமுதீன் மற்றும் விடய உத்தியோகத்தர் திருமதி. பஸ்லினா நுசைர் ஆகியோரின் அர்ப்பணிப்பான பணிக்கும், பிரதேச செயலகத்தின் ஒட்டுமொத்த உத்தியோகத்தர்களினதும் குழு முயற்சிக்கும் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாகும்.
மக்களுக்கான மனிதநேயமான சேவைகளை தொடர்ந்தும் சிறப்பாக வழங்குவதற்கான ஊக்கத்தை வழங்கும் இவ்வெற்றி, காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கும் காத்தான்குடி மக்களுக்கும் பெருமை சேர்க்கும் சாதனையாக அமைந்துள்ளது.
இச்சாதனையைப் பெற்றுக்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய காத்தான்குடி பிரதேச செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் பணிக்குழாமினருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்படுகின்றன.

News & Events

14
Sep2026
மக்களுக்கான சிறந்த சேவைக்கு காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு மாவட்ட ரீதியில் முதலிடம். 

மக்களுக்கான சிறந்த சேவைக்கு காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு மாவட்ட ரீதியில் முதலிடம். 

2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டங்களில்...

Scroll To Top