காத்தான்குடி பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்டத்திலான சிறு விற்பனைக் கண்காட்சி (25) செவ்வாய்க்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது.
இவ்விற்பனை கண்காட்சியில் உற்பத்தியாளர்களினால் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், பாதணிகள், இனிப்புப் பண்டங்கள், ஆடைகள், போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கொள்வனவில் ஈடுபட்டனர்.
இந் நிகழ்விற்கு மாவட்ட சிறு தொழில் அபிவிருத்தி சந்தைப்படுத்தல் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் SR.ராஜரெட்ணம், காத்தான்குடி பிரதேச செயலக சிறு தொழில் முயற்சிப்பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான S.சனோகாந், திருமதி.பி.சிந்துஜா, மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.எம்.சந்திய குமாரி, திருமதி.MRF.பர்வின், திருமதி.S.பிலமேந்திரன் (NADA) ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






















