நிலைபேறான வீட்டுத் தோட்டத்தினை உருவாக்குதல் வேலைத்திட்டத்தின்
கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களின் எண்ணக்கருவில் உருவான 2023 ஆம் ஆண்டில் புதிதாக 300 வீட்டுத் தோட்டங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது 2023.05.15 ஆந் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
 
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர்,கௌரவ அதிதியாக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, ஏனைய அதிதிகளாக சமுர்த்தி முகாமையாளர்களான திரு.எம்.ஏ.எம்.சுல்மி, திருமதி.எஸ்.எச்.எம்.முஸம்மில், முகாமைத்துவ பணிப்பாளர் திரு.ஆர்.வாமதேவன், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.எஸ்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இவ் வேலைத்திட்டமானது காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் செயற்படும் 99 சமுதாய அடிப்படை அமைப்புகளின் நிதிப் பங்களிப்புடன் தெரிவான 300 வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கு முதற் கட்டமாக 108 பேருக்கு கத்தரி, வெண்டி,பாகல்,கெக்கரி,கீரை,பீர்க்கு, ஆகிய பயிர் விதைகள் உள்ளடக்கிய விதைப்பக்கற்றுக்கள் விநியோகிக்கப்பட்டன.ஒரு பாக்கட்டின் பெறுமதி ரூ 320 ஆகும்.
அதனைத் தொடர்ந்து வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கான தெளிவூட்டல்களை வளவாளர் விவசாய போதனாசிரியர் திருமதி.முபிதா றமீஸ் அவர்கள் வழங்கி இருந்தார்.
 
இதன் இரண்டாம் கட்ட நிகழ்வானது 2023.05.17 ஆந் திகதி புதன்கிழமை 192 பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
ReplyForward
 
News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top