"போதையற்ற ஒரு நாடு -  செழிப்பான ஒரு நாளை" எனும் தலைப்பில் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினம் நேற்று (31) காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி முன்றலில் இடம்பெற்றது.

உதவிப்பிரதேச செயலாளர் எம். எஸ். சில்மியா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்

போதையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் எமது பிள்ளைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும்  காத்தான்குடி அல் அக் ஷா பள்ளிவாயல் பிரதம பேஷ் இமாம் மௌலவி எம். இல்ஹாம் (பலாஹி) நிகழ்த்தினார்.

எமது மாவட்டத்தில் போதை தடுப்பு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனை பயன்படுத்தி போதை வஸ்த்து பாவனையை குறைப்பதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரதேச செயலக தேசிய அபாயகர ஔடதங்கள் ஒழிப்பு உத்தியோகத்தர் திரு சந்திரகாந்தன் உரை நிகழ்த்தினார்.

உதவிப்பிரதேச சேயலாளர் தனதுரையில் கொடி தினத்தின் மூலம் கூடுதலான நிதிகளை சேகரித்து எமது பிரதேசத்தில் கல்விக்காகவும் சமூக சேவைப்பணிக்காகவும் இதை பயன்படுத்த முடியும் எனவும் தனதுரையில் தெரிவித்தார்.

சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி எஸ்.எப். ஆர். பரீட், சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர்களான எம் .ஏ .எம் .சுல்மி, எஸ் எச் .எம். முஸம்மில், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

இந்நிகழ்வில்  சமுர்த்தி சமுதாய அடிப்டை அமைப்பு உறுப்பினர்களால் கொடி அணிவிக்கப்பட்டதுடன்  சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம் அன்சார் நெறிப்படுத்தியிருந்தார். நன்றியுரையினை புதிய காத்தான்குடி வலய உதவியாளர் எம். எச். எம். அன்வர் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

i1i2i4i5i6i7

News & Events

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
ஆக2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

குடியுரிமை சாசனம்

03
ஆக2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ஜூலை2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top