ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නරාජ්ය සේවා ස්ථාන
මුල් පිටුව
உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்டத்திலான சிறு விற்பனைக் கண்காட்சி -2023
காத்தான்குடி பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்டத்திலான சிறு விற்பனை கண்காட்சியானது 2023.05.29 ஆந் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.
இவ்விற்பனை கண்காட்சியில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் பாதணிகள், இனிப்புப் பண்டங்கள், குழந்தைகளுக்கான கைவினைப் பொருட்கள், போன்ற பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பெருமளவில் பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்விற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக உத்தியோகத்தர் திருமதி.எஸ்.ஜே.எம்.ஜலால்தீன், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.என்.கிருஸ்ணப்பிரியன், மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.பி.சிந்துஜா, திரு.எஸ்.சனோகாந், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.









கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் -2023
கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது 2023.05.29 ஆந் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 27ஆந் திகதி நடைபெற்ற நடமாடும் சேவையில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு சேவைகளை பெற்றுக் கொண்டமைக்காக அதனை திறம்பட ஒழுங்கமைத்த உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலாளரால் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டத்தின் அனைத்து வேலைகளும் 2023.05.31 ஆந் திகதி நிறைவு பெறும் என உதவிப் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
மேலும் உணவுப் பாதுகாப்பு ஆய்வுத் திட்டத்தினை மிக விரைவாக GNO,EDO,SDO,Dos அனைவரும் இணைந்து அதனை பூர்த்தி செய்யுமாறு பிரதேச செயலாளரால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மே 30 தொடக்கம் ஜூன் 05 வரை தேசிய ரீதியில் சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்வுகளை GNO,EDO,SDO,Dos மற்றும் கள உத்தியோகத்தர்ள் அனைவரும் பங்குபற்றுமாறும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முதியோர் செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்,SO,
YSO, WDO, ECDO, சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆகிய உத்தியோகத்தர்களிடம் தங்களின் வேலைகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக பிரதேச செயலாளரால் மீளாய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



பொதியிடல் சம்பந்தமான பயிற்சி (Packaging program )
காத்தான்குடி சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் தொழில் முயற்சியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்களுக்கு பொதியிடல் சம்பந்தமான பயிற்சியானது 2023.05.24 ஆந் திகதி பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சியானது பொதியிடல் தொடர்பான அறிமுகம், யுத்திகள், பொதியிடுவதற்கு தேவையான மூலப் பொருட்கள்,அவ் மூலப் பொருட்களை பெற்றுக் கொள்ளும் முகவர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களின் சந்தேகங்கள் என்பவற்றை வளவாளராக கலந்து கொண்ட திரு.எவ்.ரஜீவ் சங்கர் (IDB) கலந்து கொண்டு தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்பயிற்சிக்கு 20 சுய தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இறுதியாக பிற்பகல் 2.00 மணிக்கு சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.எஸ்.சனோகாந் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.







பிரதேச தினக் கூட்டம் -2023
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான 3வது பிரதேச தினக் கூட்டமானது 2023.05.22 ஆந் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் இப் பிரதேசத்தில் இனங் காணப்பட முக்கிய பிரச்சனைகளான டெங்கு பரவல், மீனவர்கள் பிரச்சனைகள் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாகவும், சிறுவர் இல்ல மாணவர்களுக்கும் , பாடசாலை மாணவர்களுக்கும் பல்,கண் சம்பந்தமான மருத்துவ முகாம்களை நடாத்துமாறு பிரதேச செயலாளரால் சுகாதார வைத்திய அதிகாரியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதுடன் அதனை நடத்துவதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டது.
அத்துடன் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு வாய் (ஆண்), மற்றும் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வூட்டுவது தொடர்பாகவும், போதைப் பொருள் ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச மட்டத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர், செயலாளர் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள், அரச,அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலாளர் அவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




























