காத்தான்குடி பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்டத்திலான சிறு விற்பனை கண்காட்சியானது 2023.05.29 ஆந் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.
இவ்விற்பனை கண்காட்சியில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் பாதணிகள், இனிப்புப் பண்டங்கள், குழந்தைகளுக்கான கைவினைப் பொருட்கள், போன்ற பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பெருமளவில் பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்விற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, நிருவாக உத்தியோகத்தர் திருமதி.எஸ்.ஜே.எம்.ஜலால்தீன், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.எம்.எம்.எம்.ஜரூப், மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.என்.கிருஸ்ணப்பிரியன், மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.பி.சிந்துஜா, திரு.எஸ்.சனோகாந், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
























