காத்தான்குடி பிரதேச செயலக கலாசாரப்பிரிவு மற்றும் பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் மற்றும் கலைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நாடகப்பயிற்சி பட்டறையானது 2022.01.27 ஆந் திகதி முற்பகல் 8.30 மணிக்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.எம்.சில்மியா அவர்களது தலைமையில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சி பட்டறையானது மாணவர்கள், கலை இலக்கிய கழக உறுப்பினர்களுக்கு (கலைஞர்கள்) நாடகம், இலக்கியம் தொடர்பிலான விரிவுரையினை கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி.சி.ஜெயசங்கர் அவர்களால் பயன் பெறும் வகையில் ஆற்றுப்படுத்தலுடனான நாடகப்பயிற்சிப்பட்டறை வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் கலாச்சார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி திரு.ஏ.ஜே.ஜவாஹிர், கலாசார உத்தியோகத்தர் திரு.எம்.ஜ.எம்.ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்துஉஷா, உதவி கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.சர்மிலா, கலாசார மத்திய நிலையத்தின் உத்தியோகத்தர் திரு.எம்.ஆர்.எம்.என்.ஹில்மி, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.நுஹா, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி.சுஹைலா காலிதீன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


















