சமூக சேவைகள் அமைச்சினால் காத்தான்குடி சமூக பராமரிப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் அங்கவீனமுற்ற பிள்ளைகளுக்கான கல்விக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு 2022.01.26 ஆந் திகதி புதன் கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சமூக சேவை உத்தியோகத்தர் திரு.எஸ்.ஏ.சீ.நஜிமுதீன் அவர்கள் தலைமையில் சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.எம்.சில்மியா அவர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.இந்நிகழ்வானது பாடசாலை செல்கின்ற அங்கவீனமுற்ற 2 பிள்ளைகளுக்கு கல்விக்கொடுப்பனவாக ஒருவருக்கு ரூபா 10,000 வீதம் ரூபா 20,000 பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் உதவிப்பிரதேச செயலாளரால் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பயனாளிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.ராதிகா அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

















