தெங்கு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் அரச அதிகாரிகளுக்காக முன்னெடுக்கப்படும் “ஆரோக்கியமான உயர்தர தேங்காய் எண்ணெய் நுகர்வு, தேங்காய் வீணாவதைக் குறைத்தல் மற்றும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் சேவைகள்” தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று (23.09.2026) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த உற்பத்திப் பொருட்களை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்துதல், உயர்தர தேங்காய் எண்ணெயின் நுகர்வு, தேங்காய் வீணாவதைக் குறைத்தல் மற்றும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
தேங்காய் எண்ணெயின் தரம் மற்றும் ஆரோக்கியமான நுகர்வு தொடர்பான விடயங்கள், தேங்காய் வீணாவதைத் தவிர்ப்பதற்கான நடைமுறைகள், தேங்காய் வளத்தை வினைத்திறனுடன் பயன்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வளவாளர்களால் விளக்கமளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ்ட பரிசோதகர் H. R. A. Chandana, தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பரிசோதகர் A. A. Azeer Ahamed மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் P. Vithurshan மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்(PHI) M. ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு, துறைசார் தகவல்களை வழங்கினர்.
மேலும், தெங்கு அபிவிருத்தி அதிகார சபையினால் பொதுமக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பிலும் உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்கு, ஆரோக்கியமான உணவுப் பயன்பாடு, தென்னை வளத்தைப் பாதுகாத்தல் மற்றும் வீண்விரயத்தைக் குறைத்தல் தொடர்பான அறிவை அரச உத்தியோகத்தர்களிடையே மேலும் மேம்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
அத்துடன் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
f2f3f4f5

News & Events

21
සැප්2026
கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் "அத்தம" நிகழ்ச்சித்திட்ட சிரமதான நிகழ்வு காத்தான்குடி வாவிக்கரையில் சிறப்பாக இடம்பெற்றது.

கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் "அத்தம" நிகழ்ச்சித்திட்ட சிரமதான நிகழ்வு காத்தான்குடி வாவிக்கரையில் சிறப்பாக இடம்பெற்றது.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுத்துவரும் "அத்தம" நிகழ்ச்சித்திட்ட...

14
සැප්2026
மக்களுக்கான சிறந்த சேவைக்கு காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு மாவட்ட ரீதியில் முதலிடம். 

மக்களுக்கான சிறந்த சேவைக்கு காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு மாவட்ட ரீதியில் முதலிடம். 

2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டங்களில்...

Scroll To Top