நவம்பர் 17 நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளரின் வழிகாட்டலின் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புடனும் மாணவர்களுக்கு நீரிழிவு தொடர்பாக விசேட விழிப்புணர்வு செயலமர்வு 2023.11.17 ஆந் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரியில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் G.சுகுணன், தொற்றா நோய்களுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி E. உதயகுமார் , காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி UL . நஸீர்தீன், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்,
SPHI, PHI , காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




















