குறைந்த வருமானம் பெறும் மற்றும் தற்காலிக நெருக்கடிக்குள்ளான குடும்பங்கள் தொடர்பான பகுப்பாய்வு செயலமர்வு 2023.09.15 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா, நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், முகாமைத்துவ பணிப்பாளர் ஆர்.வாமதேவன், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.எஸ்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வின் வளவாளராக சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.எம்.அலி அக்பர் அவர்களால் விரிவுரைகள் இடம்பெற்றது.
மேலும் ஆசிய வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் எதிர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வாழ்வாதார கருத்திட்டங்களின் சந்தை வாய்ப்புக்கள் தொடர்பாகவும், பிரதேச மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை காண்பதற்குரிய அதிகமான செயற்திட்டங்களை உத்தியோகத்தர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.அந்தவகை யில் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்களும் இணைந்து இச் செயற்பாடுகளை செயற்படுத்துவதற்கு முழு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
இச்செயலமர்வில் பல்வேறு திணைக்களங்களைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பல்வேறு திணைக்கள தலைவர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



















