தேசிய உணவு உற்பத்தி வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள சமுதாய அடிப்படை அமைப்புக்களினால் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிற்கும் வழங்கப்பட்ட விதைகளை கொண்டு நடுகை செய்யப்பட்ட பூசணிக்காய் அறுவடை செய்யும் விழாவானது 2023.09.08 ஆந் திகதி 165B கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வறுவடை விழாவிற்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், வலய முகாமையாளர் SHM.முஸம்மில், கருத்திட்ட முகாமையாளர் திருமதி S.கண்ணன், மற்றும் பிரிவு SDO திருமதி.FA.முனாப், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான MHM.அன்வர், MSM.நூர்தீன், ALHM.இப்றாஹிம், பிரிவிற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் ABS.நுஸ்ரா , பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


















