காத்தான்குடி கலாசார பிரிவு நடாத்தும் மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்சிப் பட்டறையானது இன்று (20) செவ்வாய்க்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இப்பயிற்சிப்பட்டறையானது மாணவர்களின் கலை ஆர்வத்தினை மேம்படுத்தவும் , பாடசாலை மட்ட சஞ்சிகை போட்டிக்கான தரமான ஆக்கங்களை மாணவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவும், மாணவர்களுக்கு சிறுகதை எழுதுவது தொடர்பான பயிற்சிகளை வளவாளராக கலந்து கொண்ட ஓட்டமாவடி அறபாத்,கலாபூஷணம் பாத்திமா முஹம்மட் அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.



இப்பயிற்சியில் தரம் 1-13 வரை கல்வி கற்கும் 180 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் எம்ஐ.எம்.ஜவாஹிர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்துஉஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.


















