காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையானது பிரதேச செயலாளர் உ.உதயசறிதர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் தொடர்ந்து வீடு வீடான டெங்கு களவிஜயம் உத்தியோகத்தர்களால் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் இன்று (15) ஆந் திகதி 167,167E ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 225 வீடுகளுக்கு களவிஜயம் மேற்கொண்ட போது 06 வீடுகள் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 11 வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு களவிஜயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சமுதாய அடிப்படை அமைப்புக்கள், களப்பணியில் ஈடுபட்டனர்.
வீடு வீடான டெங்கு களவிஜயத்தினை தொடர்ந்து மீளாய்வு கூட்டமானது காத்தான்குடி- 01, மீராஜும்ஆ பள்ளிவாயலில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் கடந்த 07 நாட்களிலும் நகரசபையினால் எதுவிதமான ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




















