காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் வகையில் பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் பிரதேச செயலகம், நகரசபை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், இணைந்து 2023.06.06 ஆந் திகதி தொடக்கம் வீடு வீடாகச் சென்று டெங்கு களப்பரிசோதனைகள் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
டெங்கு கள விஜயத்தினை தொடர்ந்து அது தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதேச செயலாளர் அவர்களது தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இக்கூட்டத்தில் உத்தியோகத்தர்கள் கள விஜயத்தினை மேற்கொள்ளும் போது எதிர்நோக்கும் பிரச்சனைகள், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை, டெங்கு சோதனையில் எவ்வாறான இடங்களை பார்வையிட வேண்டும் என்பது தொடர்பாக பிரதேச செயலாளரினால் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.




















