டெங்கு ஒழிப்பு  நடவடிக்கை தொடர்பான கூட்டமானது 2023.06.06 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
 
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில் தற்போதைய காலநிலை மாற்றத்தினால் டெங்கு நோயின் தீவிரத்தன்மை குறைவடைந்த போதிலும் முற்றாக டெங்கு நுளம்பின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை. காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை என்ற நிலை வரும் வரை  MOH,UC, பொலிஸ், பிரதேச செயலகம், இணைந்து அதனை கட்டுப்படுத்த வேண்டுமெனவும் அத்துடன் டெங்கு பரவும் ஆபத்தான இடங்கள், வீடுகள், நீர் தேங்கி நிற்கும் இடங்கள், என்பவற்றை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
 
மேலும் மிக முக்கியமாக பாடசாலைகளில் டெங்கு சிரமதானம் செய்தல், மாணவர்களுக்கு டெங்கு தொடர்பான விழிப்புணர்வுகளை நடாத்துதல், பாடசாலைகளில் டெங்கிற்கு பொறுப்பான ஆசிரியர் ஒருவரை நியமித்தல், அத்துடன் விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து டெங்கினை கட்டுப்படுத்த வேண்டுமெனவும் திண்மக் கழிவு முகாமைத்துவத்தினை திறம்பட செய்ய பாடசாலை மாணவர்கள் மத்தியில் பல விரிவுரைகள் செய்ய வேண்டிய தேவை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதற்கு பிரதேச செயலகம், நகரசபை, பொலிஸ் முழு ஒத்துழைப்பையும் தருவதாகவும் திட்டங்களை பாடசாலை ஆரம்பமான பின்னர் நடைமுறைப் படுத்தபடவுள்ளதாகவும் திட்டமிடப்பட்டது.
 
அத்துடன் 2023.06.06 ஆந் திகதியிலிருந்து (Home & Home visit) வீடுகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு கள நடவடிக்கைகளை மேற்கொள்வது என திட்டமிடப்பட்டு Action plan செய்யப்பட்டது.
 
இக்கூட்டத்திற்கு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, காத்தான்குடி நகரசபை செயலாளர்,  AMO, மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நிருவாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர்,DEO, பொது சுகாதார பரிசோதனைகள், பள்ளி வாயலில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் செயலாளர், வெளிக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
News & Events

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டம்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய...

10
අගෝ2026
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் அதிகாரசபைக் கூட்டம்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி,...

03
අගෝ2026
அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

அஸ்ஸஹீட் அஹமட்-லெப்பை பாலர் பாடசாலையை புனர்நிர்மானம்.

2026/07/28 அன்று செவ்வாய்க்கிழமை, இல.35/3, முஸ்தபா ஹாஜியார் வீதி,...

24
ජූලි2026

தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் (Packaging) தொடர்பான செயலமர்வு.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்...

Scroll To Top