
News & Events
பல்துறைசார் போசாக்கக்கான நிகழ்ச்சித் திட்டம் - 2017 அதிபர் மற்றும் ஆசிரியருக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு14.11.2017 ம் திகதி காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்;டபத்தில் பிரதேச செயலாளர் ரு.உதயஸ்ரீதர் தலைமையில் இடம் பெற்ற பல்துறை சார் போசாக்குக்கான நிகழ்ச்சித் திட்டத்தின் ஏற்பாடுசெய்யப்பட்ட விழிப்பூட்டல் கருத்தரங்கில் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள் மற்றும் தெரிந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விதாதா வள நிலைய பயிற்ச்சி நெறிகாத்தான்குடி விதாதா வள நிலையத்தினால் சுய தொழில் முயற்சியாளர்களை அதிகரிக்கும் நோக்கில் 09-10-2017 அன்று சலவைத்தூள்(washing powder),கைகழுவி திரவம்(Hand wash), வளி மணமூட்டி(Air freshener) பயிற்சி நெறிகள் நடாத்தப்பட்டன.இதில் 25 பயனாளிகள் கலந்து கொண்டனர். இதன் வளவாளராக களுவாஞ்சிகுடி விதாதா வள நிலைய விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் கலந்து கொண்டார்.
|