Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka

dskky

எமது நிகழ்வுகள்

இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கான வழிகாட்டற் கருத்தரங்கு

 

காத்தான்குடி பிரதேச செயலக தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல விரும்பும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (14-04-2014) காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:00 வரை காத்தான்குடி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. காலை 9:00 மணிமுதல் 10:00 மணி வரை பெண் மாணவிகளுக்காகவும் காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை ஆண்களுக்காகவும் என இரு அமர்வுகளாக நடைபெற்ற இந்நிகழ்வில் அஸ்ஸெய்க் அன்சார் (நளீமி) BA, SLAS (உதவி பிரதேச செயலாளர்), அஸ்ஸெய்க் M.T.M.சப்ரி (நளீமி), அஸ்ஸெய்க் ரிஜ்பான் (இஸ்லாஹி), அஸ்ஸெய்க் இஸ்ஸத் (இர்பானி), அஸ்ஸெய்கா A.G.ஸம்ஹா (சித்தீகியா) ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

Read more...

 

காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் திவிநெகும உற்பத்தி விற்பணை சந்தை

திவிநெகும திணைக்களத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் திவிநெகும உற்பத்தி விற்பணை சந்தையின் ஆரம்ப வைபவம் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் அவர்களின் தலைமையில் 11/04/2014 அன்று நடை பெற்றது.


 

காத்தான்குடி பிரசேத்திற்கான திவிநெகும உற்பத்தி சந்தையை பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்துவைத்தார். இந்த ஆரம்ப வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபை முதல்வர் எஸ்.எச்.அஸ்பர், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் பி.குணரட்னம், காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் எஸ்.மனோகிதராஜ், காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.கருணாகரன் மற்றும் காத்தான்குடி சமுர்த்தி முகாமையாளர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Read more...

 
பிரதச செயலாளர்

U. Uthayasrither (SLAS)

065-2246591

News and Events
Who is Online
We have 85 guests online
ஸம் ஸம் சிறப்பு மலர்

Event
December 2018
S M T W T F S
25 26 27 28 29 30 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31 1 2 3 4 5
Annual Report 2015

anual

Content View Hits : 131913