Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka

dskky

எமது நிகழ்வுகள்

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழான உபகரணங்கள் வழங்கள் - 2016

DCB

புனர்வாழ்வு மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் அமைச்சர் MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழான உபகரணங்கள், தளர்பாடங்கள் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் ACA அப்கர் தலைமையில் 22-07-2016 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ புனர்வாழ்வு மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் அமைச்சர் MLAM ஹிஸ்புல்லாஹ் அவா்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டாா்கள். மேலும் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், காணக்களார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் 24 சமூக அமைப்புக்கள், விளையாட்டு கழகங்கள், முன்பள்ளி மத்ரசாக்கள் முதியோர் இல்லங்களுக்கு ரூபா 10,85,000.00 பெறுமதியான உபகரணங்கள் விளையாட்டு சாதனங்கள், தளர்பாடங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

 

சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மரநடுகை

உலக சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நாடலாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.

இதன் அடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சீ.அஹமட் அப்கர் தலைமையில் இன்று  (03) வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் மரநடுகை என்பன காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கணக்காளர் செல்வி கே.சித்ரா, திட்டமிடல் பிரதிப்பபணிப்பாளர் எம்.சிவராஜா, பிரதேச சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பரமாணந்தம் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பொலித்தீன் பாவனையினை ஒழித்து அதற்கு மாற்றீடாக சீலையிலான பேக் (பைகள்) அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

பிரதேச கலை இலக்கிய விழா- நாட்டார் பாடலுக்கான போட்டி

காத்தான்குடி பிரதேச கலை இலக்கிய விழாவினை முன்னிட்டு பாடசாலைகளுக்கிடையிலான பிரதேச மட்ட போட்டியின் நாட்டார் பாடலுக்கான போட்டி வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பாலர் பிரிவு, கணிஷ்ட பிரிவு என இரு பிரிவுகளாக மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற இப்போட்டியில் மாணவ மாணவிகள் தமது திறமைகளை இதன்போது வெளிக்காட்டினர்.

இதன் ஒருங்கிணைப்பாளர்களான கலாச்சார உத்தியோகத்தர் எம்.எம்.மஹ்பூல், கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் (மதனி) ஆகியோரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இப்போட்டியின் மத்தியஸ்தர்களாக பாவலர் சாந்தி முகைதீன் கலாபூசணம் எம்.சீ;.எம்.முஸ்தபா எம்.கமர்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 
DSKApps e-Gov.Initiative

Dskapps

Dskapps

News and Events
Who is Online
We have 77 guests online
ஸம் ஸம் சிறப்பு மலர்

Event
August 2017
S M T W T F S
30 31 1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31 1 2
Annual Report 2015

anual

Content View Hits : 90417