Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka

dskky

எமது நிகழ்வுகள்

கொழும்பு சிரீ ஜெயவர்த்தன புர பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பின்னவல சங்க சுமன தேரர் தலைமையிலான குழுவொன்று காத்தான்குடி பிரதேச செயலகத்திற் விஜயம் செய்தது

மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பு மற்றும் அரசியல் நடவடிக்கை தொடர்பாக அறிந்து கொள்ளும் பொருட்டு கொழும்பு சிரீ ஜெயவர்த்தன புர பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பின்னவல சங்க சுமன தேரர் தலைமையிலான குழுவொன்று (4.12.2016) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தது.

கிராம அபிவிருத்தி திணைக்கத்தில் ஏற்பாட்டில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இவர்கள் இதன் போது; காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சென்று அங்குள்ள மக்களின் நிலைமை மற்றும் அரசியல் நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்து கொண்டனர்.

 

இதன் போது காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒன்று கூடலிலும் பங்குபற்றினர்

Read more...

 

பாரம்பரிய கைவினைக் கிராமங்களை அபிவிருத்தி செய்தல் 2016

 

dskky

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதியுதவியில் பாரம்பரிய கைவினைக் கிராமங்களை அபிவிருத்தி செய்தல் 2016 திட்டத்தின்கீழ் பன்சார் அலங்காரப் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் பயனாளிகளுக்கு இரண்டு நாள் பயற்சியின் பின்னர் 03.11.2016ம் திகதி பன்அறைக்கும் இயந்திரம், பானை, கரண்டி போன்ற பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு பிரதேச செயலாளர் எஜ்.எல். எம். ஹனிபா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி வைத்தார்.

Read more...

 

உற்பத்தி திறன் போட்டியில் காத்தான்குடி பிரதேச செயலகம் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடம்

dskkyஉற்பத்தி திறன் செயலகம் அகில இலங்கை ரீதியாக 2015ம் ஆண்டுக்காக நடாத்திய உற்பத்தி திறன் போட்டியில் பிரதேச செயலகங்களுக்குள் காத்தான்குடி பிரதேச செயலகம் அகில இலங்கை ரீதியில் 3மிடத்தை பெற்றுள்ளது.போட்டி முடிவுகள் 16.09.2016 வெளிவந்த நிலையில் காத்தான்குடி பிரதேச செயலகம் அகில இலங்கை ரீதியில் 3மிடத்தை பெற்றுள்ளது.

கடந்த மாதம் இந்தப் போட்டி நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேச செயலகங்கள் இந்தப் போட்டியில் பங்கு பற்றின.

போட்டி நடுவர்கள் கடந்த மாதம் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உற்பத்தி திறன் குறித்து பல்வேறு பரிசீலனைகளை மேற் கொண்டனர்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எச்.முசம்மில் அவர்களின் ஆலோசனையின் பேரிலும் வழிநடாத்தலிலும் இந்தப் போட்டிக்காக காத்தான்குடி பிரதேச செயலகம் விண்ணப்பித்து போட்டியை எதிர் கொண்டது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எச்.முசம்மில் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் உட்பட காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பல் வேறு மட்ட உத்தியோகத்தர்களும் இதற்காக உழைத்ததுடன் தியாகத்துடன் செயற்பட்டனர்.

2014ம் ஆண்டுக்கான போட்டியிலும் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு விஷேட விருது கிடைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் உற்பத்தி திறன் போட்டியில் காத்தான்குடி பிரதேச செயலகம் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடத்தைப் பெற்றமைக்காக அதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய பிரதேச செயலாக உத்தியோகத்தர்களுக்கும்  ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் பிரதேச செயலாளர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார்.

 
DSKApps e-Gov.Initiative

Dskapps

Dskapps

News and Events
Who is Online
We have 79 guests online
ஸம் ஸம் சிறப்பு மலர்

Event
June 2017
S M T W T F S
28 29 30 31 1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 1
Annual Report 2015

anual

Content View Hits : 85693